“அனைவருக்கும் மகிழ்ச்சியான பண்டிகையாக அமையட்டும்”.. மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ள அமீரக தலைவர்கள்..!!

உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் இன்று தீபாவளியை வெகு விமரிசையாக கொண்டாடி வரும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர், பிரதமர் மற்றும் பிற அமைச்சர்களும் தங்களின் தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.
அமீரக ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், உலகெங்கிலும் உள்ள குடியிருப்பாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் இந்த விழாவில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து வெளியிட்ட ஒரு ட்வீட்டில், “ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உலகம் முழுவதும் தீபங்களின் திருநாளான தீபாவளியை கொண்டாடும் அனைவருக்கும் எங்களது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். வரும் ஆண்டு அனைவருக்கும் அமைதி, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை அளிக்கட்டும்” என்று கூறியுள்ளார்.
அதே போல ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களும், தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில் “உலகம் முழுவதும் தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும் நாங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களுக்கு மிகவும் வளமான மற்றும் மகிழ்ச்சியான பண்டிகையாக அமைய வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் தங்கள் பால்கனிகளை அலங்கரித்து, பல வண்ணங்களில் மின்னும் விளக்குகளை வைத்துள்ளனர். துபாயில், அல் மன்கூல், பர் துபாய், கராமா மற்றும் அல் பர்ஷா போன்ற பகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்கள் தங்களின் கட்டிடங்கள் பிரமிக்க வைக்கும் விளக்குகளின் அழகிய காட்சியாக மாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel