அமீரக சட்டங்கள்

UAE: வாடகைக் காரை ஓட்டும்போது அபராதம் விதிக்கப்பட்டால் என்ன செய்வது..?? அதற்கான நடைமுறை என்ன..??

ஐக்கிய அரபு அமீரகத்தில் நீங்கள் வாடகை கார் ஓட்டும்போது அபராதம் விதிக்கப்பட்டதா? நீங்கள் அந்த அபராதத்தை செலுத்தத் தவறினால் பல்வேறு விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே, நீங்கள் காரை வாடகைக்கு எடுப்பதற்கு முன் சரிபார்க்க வேண்டிய விஷயங்கள் மற்றும் அபராதத்தை எப்படி செலுத்துவது போன்ற விவரங்களை தெரிந்து கொள்வது சிறந்தது. இது தொடர்பான உங்களுக்குத் தேவையான அனைத்து விபரங்களும் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

வாடகை காருக்கு போக்குவரத்து அபராதம் விதிக்கப்பட்டால் என்ன ஆகும்?

பொதுவாக, அமீரகத்தில் ஒரு காரை வாடகைக்கு எடுப்பதற்கு முன், அத்தகைய சூழ்நிலைகளில் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யுமாறு வாடிக்கையாளரிடம் கேட்கப்படும். அவ்வாறு தடுத்து வைக்கப்படும் தொகை நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும் மற்றும் முன்கூட்டியே வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கப்படும்.

அத்துடன் கார் இன்னும் வாடிக்கையாளரின் வசம் இருக்கும் பட்சத்தில் அபராதம் கணினியில் காட்டப்பட்டால் வாடிக்கையாளர் அபராதத்தை செலுத்துவார், மாறாக காரைத் திருப்பிக் கொடுத்த பிறகு அபராதம் வந்தால், வாடகை நிறுவனம் வாடிக்கையாளரின் கிரெடிட் கார்டில் வைத்திருந்த டெபாசிட் தொகை மூலம் அபராதத்தை செலுத்தும் என்று கூறப்படுகின்றது.

தொடர்ந்து பேசுகையில், சில சமயங்களில் அவ்வாறு வாடிக்கையாளரின் கிரெடிட் கார்டில் வைக்கப்பட்டிருந்த தொகையை விட அபராதம் அதிகமாக இருந்தால், நிறுவனத்தின் கணக்கிற்கு பணத்தை மாற்றுமாறு வாடிக்கையாளரிடம் கேட்டு, அபராதம் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதேசமயம், வாடிக்கையாளர் அபராதத்தை செலுத்தவில்லை என்றால், நிறுவனம் அவர்கள் மீது சிவில் வழக்கு பதிவு செய்யலாம் என்றும் கூறப்படுகின்றது.

 

போக்குவரத்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி அறிவது?

அமீரகத்தில் வாடகைக் கார் மூலம் போக்குவரத்து விதிமீறல் ஏற்படும் போது வாகனத்திற்கு போக்குவரத்து அபராதம் விதிக்கப்பட்டால், கார் வாடகை நிறுவனத்திற்கு காவல்துறை மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற சம்பவத்தில் துபாய் காவல்துறை அபராதம் செலுத்தச் சொல்லி SMS அனுப்பியதும், வாடகை நிறுவனம் வாடிக்கையாளரிடம் அபராதம் செலுத்துமாறு தெரிவிக்கும். அப்போது, அவர்கள் வாடகையை செலுத்தவில்லை என்றால், ஏஜென்சி அதற்கு பணம் செலுத்தி வாடகை எடுத்ததற்கான கட்டணத்தில் அந்த அபராதத்தையும் சேர்ந்து மொத்த கட்டணத்தை வசூலிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, வாடிக்கையாளர்கள் எப்போதும் போக்குவரத்து அபராதம் தொடர்பான நிறுவனத்தின் கொள்கையை கேட்பது மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை படிப்பது முக்கியம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், காரின் ப்ளேட் எண்ணைப் பயன்படுத்தி ஆன்லைனில் போக்குவரத்து அபராதம் உள்ளதா என்பதை வாடிக்கையாளரே சோதித்துக்கொள்வது நல்ல நடைமுறை என்று சிலர் பரிந்துரைத்துள்ளனர்.

அந்தவகையில், துபாயில் வாகனம் ஓட்டினால், ‘Dubai Police’ செயலி மூலமாகவோ அல்லது ஒருங்கிணைந்த கால் சென்டர் – 901 மூலமாகவோ அபராதத்தைச் சரிபார்க்கலாம். அதேபோல்,  அபுதாபியில் இருந்தால், ‘TAMM’ செயலியில் உங்கள் போக்குவரத்து அபராதங்களைக் காணலாம் மற்றும் பிற எமிரேட்களில் உள்ள வாடிக்கையாளர்கள் உள்துறை அமைச்சக (MOI) ஆப் அல்லது கால் சென்டரைப் பயன்படுத்தலாம் – 8005000.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!