அமீரக செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்காக துபாய் ஏற்பாடு செய்துள்ள பல்வேறு வசதிகள்.. மெட்ரோ முதல் பார்க்கிங் வரை RTA வழங்கும் பிரத்யேக சேவைகள் …

ஐக்கிய அரபு அமீரகம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையையும் பயணத்தையும் எளிதாக்குவதற்கு பல முயற்சிகள் மற்றும் சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, துபாயின் RTA, இந்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எமிரேட் முழுவதும் பல சேவைகள் மற்றும் சிறப்பு அம்சங்களை வழங்கியுள்ளது.

துபாய் எப்படி மாற்றுத்திறனாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது என்பதைப் பின்வருமாறு பார்க்கலாம்:

நோல் கார்டு:

மாற்றுத்திறனாளி சமூகத்தினர் துபாய் மெட்ரோ மற்றும் பொதுப் பேருந்துகளில் சிறப்பு நோல் கார்டைப் பயன்படுத்தி இலவசமாகப் பயணிக்கலாம். இந்த கார்டை 70திர்ஹம்ஸிற்கு  (50 திர்ஹம்ஸ் கார்டின் விலை,  20 திர்ஹம்ஸ் ஆரம்ப கட்டணம்) வாங்கலாம். இது 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

மெட்ரோ ரயில்கள் மற்றும் நிலையங்கள்

 1. மெட்ரோவின் பிளாட்பார்ம்களில் பார்வைக் குறைபாடுள்ளவர்கள் நடந்து செல்ல  அனுமதிக்கும் தொட்டுணரக்கூடிய பாதைகள் உள்ளன.
 2. ஒவ்வொரு பெட்டியிலும் சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட இடம் நியமிக்கப்பட்டுள்ளது. சக்கர நாற்காலிகள் உள்ளே நுழையும் அளவுக்கு விசாலமான ரயில் கதவுகளுக்கு அருகில் இவை அமைந்துள்ளன.
 3. கதவுகளைத் திறப்பது மற்றும் மூடுவது பற்றிய எச்சரிக்கை அறிவிப்பு ஆடியோ மற்றும் காட்சி வடிவங்களில் வழங்கப்படுகிறது.
 4. அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் உறுதியான மக்களுக்காக ஸ்டால்களுடன் கூடிய கழிப்பறைகள் உள்ளன.
 5. ஸ்டேஷன்களில் உள்ள லிஃப்ட்கள் சக்கர நாற்காலிகளை பொருத்தும் அளவுக்கு பெரியவை.
 6. செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு, ரயில் எங்கே உள்ளது மற்றும் நடைமேடைக்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதைக் காட்டும் திரைகள் பொருத்தப்பட்டுள்ளன. பார்வையற்றோருக்கான ஆடியோ அறிவிப்புகளுடன் இவை இணைக்கப்பட்டுள்ளன.
 7. சக்கர நாற்காலியில் பயணிப்பவர்கள் அணுகுவதற்கு ஏற்ற உயரத்தில் மெட்ரோவில் ஹேண்ட் ரெஸ்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 8. மெட்ரோ நிலையங்களில் உள்ள அனைத்து எஸ்கலேட்டர்களிலும் அவசரகால ‘stop’ பொத்தான்கள் உள்ளன. இடத்தை சிறப்பாக ஒளிரச்செய்ய உதவும் வகையில் அவற்றின் முழு நீளத்திலும் விளக்குகள் உள்ளன.
 9. பிரதான நிலைய நுழைவாயில்களுக்கு அருகில் பிரத்யேக பார்க்கிங் இடங்கள் உள்ளன.
 10. ஆட்டோமேட்டிக் கதவுகள் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதான அணுகலை வழங்குகின்றன.

பொது பேருந்துகள்

 1. துபாயின் அனைத்து புதிய பேருந்துகளும் சக்கர நாற்காலியில் பயணிப்பவர்கள் எளிதாக ஏறுவதற்கும் இறங்குவதற்கும் தரை மட்டத்தை குறைக்கும் திறன் கொண்டவை.
 2. பஸ் டிரைவருக்கு நிறுத்தத்தை சமிக்ஞை செய்வதற்கான புஷ் பட்டன்கள் பஸ்ஸைச் சுற்றி எளிதில் அணுகக்கூடிய இடங்களில் உள்ளன.
 3. பல பேருந்து நிறுத்தங்களில் குளிரூட்டப்பட்ட தங்குமிடங்கள் உள்ளன, அதில் மக்கள் பேருந்துக்காக காத்திருக்க முடியும்.

கடல் போக்குவரத்து

 1. எமிரேட்டின் வாட்டர் பஸ்களில் ஒரே நேரத்தில் மூன்று சக்கர நாற்காலிகள் வரை இடமளிக்க முடியும், மேலும் போதுமான இருக்கைகளும் உள்ளன.
 2. ஒவ்வொரு நிறுத்தத்திலும், மாற்றுத்திறனாளிகள் வாட்டர் பஸ்ஸில்  நுழைவதற்கு உதவ ஒரு ஊழியர் இருக்கிறார்.
 3. வாட்டர் பஸ்ஸில் உள்ள LCD மானிட்டர்கள் முக்கியமான தகவல் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைக் காட்டுகின்றன.
 4. அதேபோல், ஃபெர்ரியில் பயணம் செய்வதற்கு ஒரே நேரத்தில் இரண்டு சக்கர நாற்காலிகளுக்கு இடம் உள்ளது, மேலும் இருக்கைகள் மடிக்கக்கூடியவை என்பதால், சக்கர நாற்காலிகள் கப்பலில் வசதியாக நகரும்.

துபாய் டாக்ஸி

துபாயில் மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேக டாக்சிகள் உள்ளன. இந்த பிரத்யேக டாக்சிகளில் சக்கர நாற்காலி, சக்கர நாற்காலிகளுக்கான சிறப்பு லிஃப்ட், செயற்கை சுவாச அமைப்புகள் மற்றும் அவருடன் பயணிப்பவருக்கான இருக்கைகளும் உள்ளன. இந்த டாக்சிகள் எமிரேட் முழுவதும் 24 மணி நேரமும் இயங்கும், மேலும் சிறப்பு பயிற்சி பெற்ற ஓட்டுநர்களால் இவை இயக்கப்படுகின்றன. எமிரேட்டில் உள்ள மற்ற டாக்ஸிகளில் வசூலிக்கும் கட்டண முறையே இதிலும் உள்ளது.

சாலைகள் மற்றும் பார்க்கிங்

 1. எமிரேட்டில் சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்கள் சாலைகளில் எளிதாகச் செல்வதற்கு வசதியாக நடைபாதையின் உயரம் இன்டர்செக்‌ஷன் மற்றும் ஜங்க்‌ஷன் அருகில் குறைக்கப்பட்டுள்ளது.
 2. பாதசாரி கடக்கும் சிக்னல்களின் நேரத்தை கணக்கிடும் போது மாற்றுத்திறனாளிகளின் இயக்கம் மற்றும் வேகம் கவனத்தில் கொள்ளப்படுகிறது
 3. RTA நகரைச் சுற்றி நடைபாலங்களை அமைத்துள்ளது. இந்த நடைபாலங்கள் மாற்றுத்திறனாளிகள் அதிகம் அணுகக்கூடிய வகையில் லிஃப்ட்களுடன் பொருத்தப்பட்டுள்ளன.
 4. பிரத்யேகமான இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு இலவச பார்க்கிங் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அனுமதிகளையும், மூத்த எமிரேட்டிகளுக்கான அனுமதிகளையும் RTA டிஜிட்டல் மயமாக்கியுள்ளது.
 5. மாற்றுத் திறனாளி மக்களுக்காக ஒரு வாகனத்திற்கு சாலிக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த விலக்கு ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படலாம்.

வாகனங்களுக்கான உரிமம்

துபாயில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்களில் குறிப்பிட்ட பாகங்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். எந்தெந்த பாகங்கள் தேவை மற்றும் எந்த நிறுவனங்கள் இந்த பொருத்துதல்களை உருவாக்குகின்றன என்பதை விவரிக்கும் சேவையை RTA வழங்குகிறது. வாகனங்கள் மாற்றியமைக்கப்பட்ட பிறகு, அவை சோதிக்கப்பட்டு, அவர்களுக்காக  உருவாக்கப்பட்ட வாகனமாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுகின்றன.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!