பெரிய மாற்றம் காணப்போகும் துபாய் ஏர்போர்ட்.. அதிகரிக்கும் பயணிகளின் போக்குவரத்தே காரணம் என தகவல்..!!
உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையத்தில் (DXB) பயணிகளின் போக்குவரத்து அபரிமிதமான வேகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவதால், விமான நிலையத்தை இன்னும் பெரியதாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாக துபாய் ஏர்போர்ட்ஸின் CEO பால் கிரிஃபித்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமையன்று துபாய் ஏர்ஷோ 2023இன் போது பேசிய கிரிஃபித்ஸ், DXB ஆண்டுக்கு சுமார் 120 மில்லியன் பயணிகள் போக்குவரத்தை எட்டியவுடன் ஒரு புதிய விமான நிலையம் தேவைப்படும் என்றும், இது 2030 களில் ஏதேனும் ஒரு கட்டத்தில் நிகழும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தற்போது, DXB ஒவ்வொரு ஆண்டும் 100 மில்லியன் பயணிகளை நிர்வகிக்க முடியும். ஆனால், புதுமையான தொழில்நுட்பங்கள், மறுசீரமைப்புகள் போன்றவற்றின் மூலம் விமான நிலையத்தின் திறனை 120 மில்லியனாக விரிவாக்க முடியும். எனவே, அடுத்த சில மாதங்களில் மெகா-விமானநிலையத்தின் வடிவமைப்பு கூறுகளில் பணியாற்றவுள்ளதாக கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய கிரிஃபித்ஸ், அல் மக்தூம் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டானது DXBயை விட இன்னும் பெரியதாகவும் இன்னும் சிறப்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்கான காரணம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இருந்தபோதிலும், புதிய விமான நிலையத்தை கட்டுவதற்கான செலவு அல்லது திறன் இலக்கு குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை. ய
அமீரகத்தின் விமானப் போக்குவரத்துத் துறை அதிவேக வேகத்தில் விரிவடைந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய மையமான DXB, மூன்றாவது காலாண்டில் 22.9 மில்லியன் பயணிகளைப் பதிவு செய்துள்ளது. மேலும், DXB ஒரு வருடத்திற்குள் ஆரம்ப கணிப்புகளை விட தொற்றுநோய்க்கு முந்தைய மைல்கல்லை விஞ்சும் என்பதில் முற்றிலும் ஆச்சரியமில்லை என்று க்ரிஃபித்ஸ் கூறியுள்ளார்.
நடப்பு ஆண்டின் முதல் ஒன்பது ஆண்டுகளில் DXB’a இன் போக்குவரத்தில் 8.9 மில்லியன் பயணிகளுடன் இந்தியா முதல் நாடாக உள்ளது. அதைத் தொடர்ந்து சவுதி அரேபியா (4.8 மில்லியன்), UK (4.4 மில்லியன்), பாகிஸ்தான் (3.1 மில்லியன்), அமெரிக்கா (2.7 மில்லியன்) மற்றும் ரஷ்யா (1.8 மில்லியன்) ஆகியவை அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.
அதேபோல், போக்குவரத்தில் முன்னணி நகரங்களாக லண்டன் (2.7 மில்லியன்) மற்றும் ரியாத் (1.9 மில்லியன்), மும்பை (1.8 மில்லியன்) மற்றும் ஜித்தா (1.7 மில்லியன்) ஆகியவை வரிசையாக இடம் பிடித்துள்ளன.
DXBயின் செயல்திறன்:
வெளியான புள்ளிவிபரங்களின் படி, விமான நிலையத்தில் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு வரிசையில் 96.4 சதவீத பயணிகளுக்கு சராசரியாக காத்திருக்கும் நேரம் 11 நிமிடங்களுக்கும் குறைவாக இருந்துள்ளது, மேலும் 95.1 சதவீத பயணிகள் புறப்படும் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டில் ஆறு நிமிடங்களுக்கும் குறைவாக வரிசையில் நின்றுள்ளனர். 98.4 சதவீத பயணிகளுக்கு பாதுகாப்புச் சோதனையின் சராசரி வரிசை நேரங்கள் நான்கு நிமிடங்களுக்கும் குறைவாகவே உள்ளன என்று புதன்கிழமை ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சரக்கு ஆண்டுக்கு 12.3 சதவீதம் அதிகரித்து 446,400 டன்களை எட்டியுள்ளது. இது ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 1.3 மில்லியன் டன் சரக்குகளை பதிவு செய்து, 1 சதவீதத்திற்கும் குறைவான சிறிய சரிவை சந்தித்துள்ளது.
அதேபோல், மூன்றாம் காலாண்டில் விமான இயக்கங்கள் 5.1 சதவீதம் உயர்ந்து 106,000 ஆக இருந்தது. இது ஜனவரி மற்றும் செப்டம்பர் இடையே மொத்த விமான இயக்கங்களில் 308,000 கையாண்டது, இது ஆண்டுக்கு ஆண்டு 25.2 சதவீத அதிகரிப்பைக் குறிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel