அமீரக செய்திகள்

அபுதாபி: புதிதாக 37 மீட்பு மற்றும் தீயணைப்பு நிலையங்கள் செயல்படும் என அறிவிப்பு!! அவசரகாலங்களில் விரைந்து பதிலளிக்கும் நோக்கில் நடவடிக்கை….

அபுதாபி முழுவதும் புதிதாக 37 மீட்பு மற்றும் தீயணைப்பு நிலையங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அபுதாபி குடிமைத் தற்காப்பு ஆணையம் (ADCDA) அறிவித்துள்ளது. இந்த முன்முயற்சியானது அவசரகாலங்களில் விரைந்து பதிலளிக்கவும், அவசரநிலைகள் மற்றும் விபத்துக்களைக் கையாளும் போது தயார்நிலையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

புதிய மீட்பு மற்றும் தீயணைப்பு நிலையங்கள் அபுதாபியில் 16 இடங்களிலும், அல் அய்னில் 14 இடங்களிலும், அல் தஃப்ரா பிராந்தியத்தில் 7 இடங்களிலும் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ADCDA இன் செயல் இயக்குநர் ஜெனரல் பிரிகேடியர் சலீம் அப்துல்லா பின் பராக் அல் தாஹேரி அவர்கள் பேசுகையில், இந்த முயற்சியானது எமிரேட்டின் அவசரகால அமைப்பை ஆதரிப்பதற்காக கொண்டுவரப்பட்ட விரிவான திட்டத்தின் ஒரு பகுதி என்று கூறியுள்ளார்.

இந்தத் திட்டத்தில் மனிதவளங்களுக்கு பயிற்சியளித்தல், திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்துதல், மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கான அதிகாரத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்துதல் மற்றும் பல்வேறு அவசரநிலைகளை உயர் செயல்திறனுடன் கையாள்வதில் அதன் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

அத்துடன் புதிய நிலையங்கள் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களுடன் மிக உயர்ந்த செயல்திறனை உறுதிப்படுத்துவதாக வெளிப்புறப் பகுதி மீட்பு மற்றும் தீயணைப்புத் துறையின் இயக்குநரும், பார்க் ரோந்துப் புள்ளிகளின் திட்ட மேலாளருமான கர்னல் சேலம் கலீஃபா அல் மன்சூரி தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!