UAE: யூனியன் தின விடுமுறையை முன்னிட்டு இலவச பார்க்கிங்.. டோல் கட்டணம் இல்லை.. அறிவிப்பை வெளியிட்ட அபுதாபி..!!
அமீரக தேசிய தின விடுமுறையை முன்னிட்டு அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) வாகன ஓட்டிகளுக்கு இலவச பார்க்கிங் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டின் 52 வது யூனியன் தின விடுமுறையின் போது அபுதாபியில் செயல்பட்டு வரும் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள், பார்க்கிங், டோல் கேட்கள் மற்றும் பொது பேருந்துகள் போன்ற சேவைகளின் நேரம் மற்றும் வேலை நேரங்களில் மாற்றங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்க்கிங்:
டிசம்பர் 2 முதல் டிசம்பர் 5ஆம் தேதி காலை 7.59 மணி வரை MAWAQiF பார்க்கிங் கட்டணம் இலவசம் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், முசாஃபா M-18 டிரக் பார்க்கிங்கை அதிகாரப்பூர்வ விடுமுறையின் போது இலவசமாக அணுகலாம்.
இதற்கிடையில், தடைசெய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவது, போக்குவரத்துக்கு இடையூறாக செயல்படுவது போன்றவற்றைத் தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளுக்கு ITC அழைப்பு விடுத்துள்ளது. அதேசமயம், நிர்ணயிக்கப்பட்ட பார்க்கிங் மண்டலங்களில் வாகனங்களை நிறுத்துமாறும், இரவு 9 மணி முதல் இரவு 8 மணி வரை குடியிருப்புப் பகுதிகளில் (residence parking) வாகனங்களை நிறுத்துவதைத் தவிர்க்குமாறும் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
டோல் கேட் கட்டணம்:
தேசிய தினத்தை முன்னிட்டு டிசம்பர் 2, சனிக்கிழமை முதல் டிசம்பர் 4 வரையிலான விடுமுறையின் போது டார்ப் டோல் கேட் (Darb toll gate) அமைப்பு இலவசம் என்று ITC அறிவித்துள்ளது. அதையடுத்து டிசம்பர் 5 செவ்வாய் அன்று பீக் ஹவர்களில் (காலை 7 மணி முதல் 9 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை) மீண்டும் டோல் கேட் கட்டணம் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
பேருந்து சேவைகள்:
அபுதாபியில் விடுமுறை நாட்களுக்கான பொதுப் பேருந்து சேவைகள் மற்றும் அட்டவணைகளைப் பொறுத்தவரை, வார இறுதி மற்றும் அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்களில் பின்பற்றப்படும் அட்டவணையின்படி பேருந்து சேவைகள் செயல்படும் என்று ITC தெரிவித்துள்ளது. மேலும், யூனியன் தின விடுமுறையின் போது ஷேக் சையத் ஃபெஸ்டிவலுக்கு பயணிகளை ஏற்றிச் செல்ல கூடுதல் பயணங்கள் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
வாடிக்கையாளரின் மகிழ்ச்சி மையங்கள்
ITC இன் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் டிசம்பர் 2ஆம் தேதி மூடப்பட்டு மீண்டும் டிசம்பர் 5 செவ்வாய் அன்று செயல்படத் தொடங்கும். இருப்பினும், வாடிக்கையாளர்கள் ITC இன் இணையதளத்தை http://www.itc.gov.ae, Darbi, Darb வலைத்தளங்கள் மற்றும் அப்ளிகேஷன்கள், அத்துடன் அபுதாபியில் டிஜிட்டல் அரசாங்க சேவைகளுக்கான “TAMM” தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் வாடிக்கையாளர்கள் 24/7 சேவைகளைக் கோர, நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் ஒருங்கிணைந்த சேவை ஆதரவு மையத்தை 800850 அல்லது டாக்ஸி அழைப்பு மையம்: 600535353 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel