புத்தாண்டையொட்டி வாகன ஓட்டிகளுக்கு இலவச பார்க்கிங்கை அறிவித்த மற்றொரு எமிரேட்…!!

துபாயில் புத்தாண்டு தினத்தையொட்டி இலவச பார்க்கிங் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அபுதாபி எமிரேட்டிலும் இலவச பார்க்கிங் அறிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபி ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சர்ஃபேஸ் பார்க்கிங் (Mawaqif) ஜனவரி 1, 2024 திங்கட்கிழமை முதல் ஜனவரி 2, 2024 செவ்வாய்க் கிழமை காலை 7.59 மணி வரை இலவசம் மற்றும் விடுமுறையின் போது முசாஃபா M-18 டிரக் நிறுத்துமிடத்தில் பார்க்கிங் இலவசம்.
அதேசமயம், தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவது, போக்குவரத்து இடையூறாக பார்க்கிங் செய்வது மற்றும் இரவு 9 மணி முதல் காலை 8 மணி வரை குடியிருப்பு பகுதிகளில் நிறுத்துவதை வாகன ஓட்டிகள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், அபுதாபி முழுவதும் உள்ள அனைத்து வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்களும் புத்தாண்டு விடுமுறையின் போது மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஜனவரி 2, 2024 செவ்வாய் அன்று அதிகாரப்பூர்வ வேலை நேரம் தொடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
24/7 சேவைகள் கிடைக்கும் ITC சேவைகள்:
- www.itc.gov.ae
- Darb மற்றும் Darbe ஸ்மார்ட்போன் ஆப்
- அழைப்பு மையம்: 800850
- TAMM இயங்குதளம்
- அபுதாபி டாக்ஸி சேவைகள்: 600535353s: 600535353
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel