அமீரக செய்திகள்

அபுதாபியில் நாளை நடைபெறவுள்ள Adnoc மாரத்தான்!! குறிப்பிட்ட சாலைகள் தற்காலிகமாக மூடப்படும் என ITC ட்வீட்….

அபுதாபியில் நாளை (சனிக்கிழமை) Adnoc மாரத்தான் போட்டி நடைபெற உள்ளதால், நள்ளிரவு முதல் மதியம் 2 மணி வரை சாலைகள் மூடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாலை மூடல் தொடர்பாக வெளியான அறிவிப்புகளின் படி, கிங் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் ஸ்ட்ரீட்டின் சில பகுதிகள் நள்ளிரவு முதல் காலை 7.30 மணி வரை மூடப்படும் மற்றும் கார்னிச் ஸ்ட்ரீட்டில் அதிகாலை 2 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்படும் என்பது தெரிய வந்துள்ளது.

அதேபோல், அல் கலீஜ் அல் அரபி ஸ்ட்ரீட் அதிகாலை 3 மணி முதல் காலை 9 மணி வரையிலும், ஷேக் ரஷீத் பின் சாயத் ஸ்ட்ரீட் காலை 4 மணி முதல் மதியம் வரையிலும் மாரத்தான் போட்டிக்காக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனம் ஓட்டுமாறும், போக்குவரத்து விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் ITC-அபுதாபி X தளத்தில் வெளியிட்ட பதிவில் கேட்டுக்கொண்டுள்ளது.

சனிக்கிழமையன்று நடைபெறும் மாரத்தான் போட்டிக்கான சாலை மூடல்கள் பந்தயப் பாதையில் இருக்கும் இடத்தைப் பொறுத்து எட்டு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், கிங் அப்துல்லா பின் அப்துல்லாஜிஸ் அல் சவுத் ஸ்ட்ரீட்டில் நள்ளிரவு தொடங்கும் மூடல், கார்னிச் தெருவில் பிற்பகல் 2 மணி வரை தொடரும் என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்வு, அட்னாக் தலைமையகத்திற்கு அருகில் வெவ்வேறு இடங்களில் தொடங்கி பைனுனா பொது பூங்காவிற்கு அருகிலுள்ள அட்னாக் வளாகத்தில் முடிவடையும் என்று அமைப்பாளர்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாராலிம்பிக்ஸ் பங்கேற்பாளர்களுக்கு பதிவு இலவசம் என்று அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வில் குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைத்து சமூகத்தினரும் பங்கேற்கலாம். விண்ணப்பதாரர்கள் பின்வரும் தூரங்களுக்கு பதிவு செய்ய முடியும்:

  • மராத்தான்
  • மராத்தான் ரிலே (2 அணிகள்)
  • 10 கிமீ
  • 5 கிமீ
  • 2.5 கிமீ.

இந்த நிகழ்வில் உலகின் சில உயரடுக்கு ஓட்டப்பந்தய வீரர்கள் உட்பட 23,000 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!