அமீரக செய்திகள்

86.8 மில்லியன் பயணிகளுடன் உலகின் பரபரப்பான விமான நிலையம் என்ற பெயரை தக்க வைத்துள்ள துபாய் ஏர்போர்ட்..!!

துபாய் சர்வதேச விமான நிலையமானது (DXB) 2023 ஆம் ஆண்டில் 56.5 மில்லியன் பயணிகளை கையாண்டு உலகின் இரண்டாவது  பரபரப்பான சர்வதேச விமான நிலையம் என்ற இடத்தைத் தக்க வைத்துள்ளதாக ஏவியேஷன் கன்சல்டன்சி OAG வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

53.98 மில்லியன் மற்றும் 45.27 மில்லியன் பயணிகளை பதிவு செய்த 2022 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மிகவும் பரபரப்பான சர்வதேச விமான நிலையமாக இருந்த இந்த மத்திய கிழக்கு விமானப் போக்குவரத்து மையம், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பயணிகளில் 25 சதவீதம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், துபாய் ஏர்போர்ட்ஸ் 2019 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் பயணிகள் போக்குவரத்து 86.8 மில்லியனை எட்டும் என்று கணித்துள்ளது.

நடப்பு ஆண்டின் இரண்டாம் பாதியில், சராசரி மாதாந்திர போக்குவரத்து 7.6 மில்லியனை எட்டியுள்ளது, அதைத் தொடர்ந்து மூன்றாம் காலாண்டிலும் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்து காணப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 2023 ம் ஆண்டின் நான்காவது காலாண்டிலும் மற்றும் 2024 ஆம் ஆண்டிலும் இந்த சாதனையை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவிக்கையில் DXB தொற்றுநோய்க்கு முந்தைய மைல்கல்லை மிஞ்சும் என்பதில் முற்றிலும் ஆச்சரியமில்லை என்று துபாய் விமான நிலையத்தின் CEO பால் கிரிஃபித்ஸ் முன்னதாக ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

OAG வெளியிட்ட புள்ளி விபரங்களின் படி, இந்த தரவரிசைப் பட்டியலில், அட்லாண்டா ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் சர்வதேச விமான நிலையம் (ATL) 61 மில்லியன் இருக்கைகளுடன் உலகின் பரபரப்பான விமான நிலையமாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதனை அடுத்து, 2023 ஆம் ஆண்டில் துபாய் இன்டர்நேஷனல் 56.5 மில்லியன் இருக்கைகளுடன் உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதாக OAG தெரிவித்துள்ளது.

அதேபோல், துபாய்-ரியாத் வழியானது 2022 இல் இரண்டாவது இடத்தில் இருந்து நழுவி, 2023 ஆம் ஆண்டில் 3.99 மில்லியன் இருக்கைகளுடன் உலகின் 6 வது பரபரப்பான வழித்தடமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

பரபரப்பான வழித்தடங்கள்-2023

  1. கோலாலம்பூர்-சிங்கப்பூர் – 4,891,952 இருக்கைகள்
  2. கெய்ரோ-ஜெத்தா – 4,795,712 இருக்கைகள்
  3. ஹாங்காங்-தைபே – 4,568,280 இருக்கைகள்
  4. சியோல்-ஒசாகா – 4,218,484 இருக்கைகள்
  5. சியோல்-டோக்கியோ – 4,155,418 இருக்கைகள்
  6. துபாய்-ரியாத் -3,990,076 இருக்கைகள்
  7. ஜகார்த்தா-சிங்கப்பூர் – 3,910,502 இருக்கைகள்
  8. நியூயார்க்-லண்டன் – 3,878,590 இருக்கைகள்
  9. பாங்காக்-சிங்கப்பூர் -3,478,474 இருக்கைகள்
  10. பாங்காக்-சியோல் -3,362,968 இருக்கைகள்

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!