அமீரக செய்திகள்

UAE: புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறையை அறிவித்துள்ள ஷார்ஜா..!!

அமீரகத்தில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 1, 2024 அன்று அதிகாரப்பூர்வ  புத்தாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து வரும் வார இறுதியில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தொடர் விடுமுறையை ஊழியர்கள் பெறவுள்ளார்கள். அதாவது ஞாயிறு மட்டும் விடுமுறை உள்ளவர்களுக்கு இரண்டு நாட்கள் தொடர் விடுமுறையும், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை உள்ளவர்களுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறையும் கிடைக்கும்.

இந்நிலையில், ஷார்ஜாவில் புத்தாண்டுக்கு ஊதியத்துடன் கூடிய 4 நாட்கள் தொடர் விடுமுறை வழங்கப்படும் என்று ஷார்ஜா அரசு உறுதி செய்துள்ளது. அதன்படி, ஷார்ஜாவின் அனைத்து அரசுத் துறைகள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என்று மனிதவளத் துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

புத்தாண்டுக்குப் பிறகு, ஜனவரி 2, 2024 செவ்வாய்க்கிழமையன்று மீண்டும் அலுவலகங்கள் செயல்படும் என்று கூறப்படுகிறது. எனவே, எமிரேட்டில் உள்ள அரசாங்க ஊழியர்கள் நான்கு நாள் வார விடுமுறையை அனுபவிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!