அமீரக செய்திகள்

அமீரகத்தில் கோடை வெப்பத்தை தணித்த திடீர் மழை..!! குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சி..!!

அமீரகத்தில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்த நிலையில், நேற்று (சனிக்கிழமை) நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. இந்த மழையானது கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து குடியிருப்பாளர்களுக்கு சிறிது மீட்சியை தந்துள்ளது. அமீரகத்தின் அபுதாபி, ஷார்ஜா மற்றும் ஃபுஜைரா ஆகிய பகுதகளில் நேற்று மழையும், ஆலங்கட்டி மழையும் பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தின் மலைகளில் மழை பெய்ததன் காரணமாக மலையிலிருந்து வரும் நீரானது அருவியைப் போன்று காட்சியளித்துள்ளது. இருப்பினும், இந்த நேரத்தில் பள்ளத்தாக்கு மற்றும் மலை பகுதிகளில் ஓட்டுவது நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளது என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மோசமான வானிலை குறித்து குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்க அபுதாபி காவல்துறையானது, “மழை காலநிலை காரணமாக எச்சரிக்கையுடன் செயல்படவும் மற்றும் மின்னணு தகவல் பலகைகளில் காட்டப்படும் மாறிவரும் வேக வரம்புகளைப் பின்பற்றவும்” என வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஷார்ஜா காவல்துறையும், குடியிருப்பாளர்களுக்கு இந்த சமயங்களில் வாகனங்களுக்கு இடையில் தூரத்தை வைத்து, வேகத்தைக் குறைக்குமாறு வாகன ஓட்டிகளைக் கேட்டுக்கொண்டது. அதே நேரத்தில் அபுதாபியில் நேற்று இரவு 9 மணிக்குப் பிறகு பரவலாக மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையில், தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) நாடு முழுவதிலும் ஆங்காங்கே பெய்து வரும் பலத்த மழை மற்றும் காற்று வீசும் காட்சிகளை உள்ளடக்கிய சில வீடியோக்களை பகிர்ந்துள்ளது. அவற்றில் ஷார்ஜாவின் கல்பாவில் எடுக்கப்பட்ட வீடியோவில், பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதைக் காணலாம்.

மேலும், நேற்று (மே.20) பெய்த மழைக்குப் பிறகு, கோர்ஃபாக்கனில் உள்ள மசாஃபியில் நீர்வீழ்ச்சி கொட்டுவதைக் காட்டும் வீடியோவை புயல் மையம் வெளியிட்டுள்ளது. கல்பாவில் பெய்த ஆலங்கட்டி மழையின் வீடியோவும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!