அமீரக செய்திகள்

உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் அபுதாபி முதலிடம்!!! துபாய், அஜ்மான், ராஸ் அல் கைமாவும் முன்னணி….

ஆன்லைன் தரவுத்தளமான Numbeo நடத்திய கணக்கெடுப்பின் படி, 2024 ஆம் ஆண்டின் உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் அபுதாபி முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும், அஜ்மான், துபாய் மற்றும் ராஸ் அல் கைமா உட்பட மற்ற மூன்று எமிரேட்டுகளும் உலகளவில் முதல் ஆறு நகரங்களில் இடம்பெற்றுள்ளன.

Numbeo வெளியிட்ட புள்ளிவிவரத் தரவுகளின் படி, அபுதாபி பாதுகாப்பு குறியீட்டில் (86.8) சிறந்ததாகவும், குற்ற அளவுகளில் (13.1) கடைசியாகவும் இருந்தது. அதேசமயம், தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் உள்ள கராகஸ் நகரம் குற்ற அளவுகளில் 82.2 மற்றும் பாதுகாப்பில் 17.8 என்ற மிக மோசமான மதிப்பெண்களுடன் கடைசி இடத்தில் உள்ளது.

Numbeo அதன் குற்றக் குறியீட்டில் 329 நகரங்களை வரிசைப்படுத்தியுள்ளது. இதனடிப்படையில் குற்ற அளவுகள் 20 ஐ விட மிகக் குறைவாகவும், 20 முதல் 40 வரையிலான குற்ற அளவுகள் குறைவாகவும், 40 மற்றும் 60 க்கு இடையில் மிதமானதாகவும், 60 மற்றும் 80 க்கு இடையில் அதிகமாகவும், 80 க்கும் அதிகமான குற்ற அளவுகள் மிக அதிகமாகவும் கருதப்படுவதாக Numbeo இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தரவரிசையில் அதிக பாதுகாப்புக் குறியீட்டைக் கொண்டிருந்தால், அது மிகவும் பாதுகாப்பான நகரமாகக் கருதப்படுகிறது.

சிறந்த பாதுகாப்பு தரநிலைகள்:

அபுதாபி 2017 ஆம் ஆண்டு முதல் உலகின் பாதுகாப்பான நகரத்தின் Numbeo பட்டத்தை பெற்றுள்ளது. தொடர்ந்து எட்டாவது முறையாக பாதுகாப்பான நகரின் தரவரிசையில் இடம்பிடித்திருப்பது குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் சிறந்த பாதுகாப்புத் தரங்களைச் செயல்படுத்துவதிலும் எமிரேட்டின் உலகளாவிய தலைமையைப் பிரதிபலிக்கிறது என்று அபுதாபி காவல்துறையின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அபுதாபி காவல்துறையின் தலைமைத் தளபதி, மேஜர் ஜெனரல் ஸ்டாஃப் பைலட்ஃபரிஸ் கலாஃப் அல் மஸ்ரூயி, அபுதாபியின் முன்னோடியான பாதுகாப்பின் அளவுகள் அதன் ஈர்ப்பை மேம்படுத்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!