அமீரக செய்திகள்
அபுதாபியில் சாலை மூடல்: இன்று முதல் முக்கிய சாலையின் ஒரு பகுதி மூடப்படுவதாக ITC அறிக்கை….

அபுதாபியில் உள்ள முக்கிய சாலையில் ஒரு பகுதி சாலை இன்று, சனிக்கிழமை (ஜனவரி 13) முதல் தற்காலிகமாக மூடப்படும் என்று அபுதாபி ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) அறிவித்துள்ளது.
ITC வெளியிட்ட அறிவிப்பின்படி, எமிரேட்டின் பிரதான சாலையான ஷேக் ரஷீத் பின் சையத் சாலையின் ஒரு பகுதி சாலை ஜனவரி 13 சனிக்கிழமை முதல் ஜனவரி 15 திங்கள் வரை மூடப்படும் என்று தெரிய வந்துள்ளது.
எனவே, வாகன ஓட்டிகள் இந்த நாட்களில் எச்சரிக்கையுடன் வாகனங்களை செலுத்துமாறும், போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறும் அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
மூடப்பட்ட சாலையை விளக்கும் வரைபடம்:
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel