அமீரக செய்திகள்

புத்தாண்டையொட்டி மில்லியன் கணக்கான பயணிகளை ஈர்த்த துபாய்!! 1.2 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் துபாய் வழியாக பயணித்ததாக தகவல்….

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மறக்க முடியாத அனுபவத்தைத் தேடும் சுற்றுலாப் பயணிகளின் சிறந்த இடமாக துபாய் மீண்டும் உருவெடுத்துள்ளது.

பொதுவாக, புத்தாண்டு தினத்தன்று வானை அலங்கரிக்கும் ஏராளமான வானவேடிக்கை நிகழ்ச்சிகள், பார்வையாளர்களை உற்சாகமூட்டும் கலை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என துபாய் முழுவதும் ஆடம்பரமான கொண்டாட்டங்களால் ஆரவாரமாக இருக்கும், இதனால் புத்தாண்டு விடுமுறைக்கு அதிகளவிலான சுற்றுலாப்பயணிகள் துபாயை நோக்கி படையெடுக்கின்றனர்.

இந்நிலையில், இந்த புத்தாண்டு விடுமுறையில் துபாய்க்கு பயணித்தவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ரெசிடென்ஸ் மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட தகவல்களின்படி, கடந்த டிசம்பர் 27, 2023 முதல் ஜனவரி 1, 2024 வரை, கிட்டத்தட்ட 1.2 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் துபாயின் வான், தரை மற்றும் கடல் துறைமுகங்கள் வழியாகப் பயணித்துள்ளனர்.

குறிப்பாக, டிசம்பர் 30, 2023 அன்று மட்டும் ஒரே நாளில் 224,380 பயணிகள் துபாய் வழியாக சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இது மறக்கமுடியாத அனுபவங்களைத் தேடும் பயணிகளுக்கான சர்வதேச இடமாக துபாயினை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

பயணப் புள்ளிவிவரங்களின் படி, ஏறத்தாழ 1.14 மில்லியன் பயணிகளில் பெரும்பாலானோர் துபாயின் விமான நிலையங்களால் கையாளப்படுகின்றனர். அது தவிர, 76,376 பயணிகள் தரை வழியாகவும், 27,108 பயணிகள் கடல் வழியாகவும் பயணித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மொத்தத்தில், 546,610 புறப்பாடுகளுடன் ஒப்பிடுகையில் 693,018 வருகைகளைக் கண்ட துபாய், உலகளாவிய ஹாட்ஸ்பாட் என்ற நகரத்தின் நற்பெயரை உறுதிப்படுத்தியுள்ளது.

 

இது குறித்து GDRFAஇன் இயக்குனர் ஜெனரல் முகமது அஹ்மத் அல் மர்ரி அவர்கள் பேசிய போது, இத்தகைய ஈர்க்கக்கூடிய புள்ளிவிவரங்கள் உலகெங்கிலும் உள்ள தனிநபர்களின் விருப்பமான தேர்வாக நகரத்தின் நிலையை உயர்த்தியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், துபாயை புத்தாண்டு கொண்டாட்ட இடமாகத் தேர்ந்தெடுத்த மில்லியன் கணக்கானவர்களிடையே துபாயின் நற்பெயரைப் பற்றி பெருமிதம் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

 

எமிரேட்டின் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, விதிவிலக்கான விருந்தோம்பல் மற்றும் பல்வேறு இடங்கள் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள பயணிகளின் இதயங்களையும் மனதையும் கவர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!