அமீரக செய்திகள்

UAE-ஓமான் எல்லையில் சுங்க ஆய்வுகளை விரைவுபடுத்த புதிய AI ஸ்கேனர்கள் அறிமுகம்!! ஒரு மணி நேரத்திற்கு எத்தனை வாகனங்களை சோதனை செய்யும் தெரியுமா???

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமான் இடையேயான தினசரி வாகனங்களின் போக்குவரத்து கணிசமான அளவில் இருப்பதால், எல்லையில் உள்ள சுங்கச் சாவடிகளில் சோதனை செயல்முறைகளை முடித்து கடப்பதற்குள் சற்று தாமதம் ஏற்படுகிறது.

எனவே, அபுதாபி சுங்கத்தின் பொது நிர்வாகம் (General Administration of Abu Dhabi Customs) எல்லையில் ஆய்வு செயல்முறையை விரிவுபடுத்தும் நோக்கில் அல் அய்ன் நகரில் உள்ள அதன் மையங்களுக்கு AI மற்றும் விரைவான இடைவிடாத ஸ்கேனிங் தொழில்நுட்பத்தின் ஆதரவுடன் மேம்பட்ட ஆய்வு சாதனங்களை வழங்குவதற்கான திட்டத்தை நிறைவு செய்துள்ளது.

அதாவது, அமீரகம் மற்றும் ஓமான் எல்லையில் அமைந்துள்ள காத்ம் அல் ஷிக்லா மற்றும் மெசியாத் சுங்க மையங்கள் ஏழு அதிநவீன எக்ஸ்ரே ஸ்கேனிங் சாதனங்களுடனும், ஆய்வு சாதனங்களுக்கான இரண்டு மையக் கட்டுப்பாட்டு மற்றும் செயல்பாட்டு அறைகளுடனும் இணைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வாகனங்கள் எல்லையில் உள்ள சுங்கத் துறைமுகங்களில் சுமூகமாக மற்றும் வேகமாகச் செல்வதற்கும், பாதுகாப்பை மேம்படுத்துவதும், வர்த்தக வழிகளை எளிதாக்குவதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

மேலும், புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள விரைவான இடைவிடாத ஸ்கேனிங் தொழில்நுட்பமானது ஒரு மணி நேரத்திற்கு 100 டிரக்குகள், 150 டூரிஸ்ட் வாகனங்கள் மற்றும் 150 பேருந்துகள் வரை ஆய்வு செய்யும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது.

இந்த ஆய்வு சாதனங்களில் உள்ள நவீன இயக்க முறைமைகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படுத்தப்படும் முதல் வகை என்றும் கூறப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!