அமீரக செய்திகள்

துபாயில் வாட்ஸ்அப் வழியாக ட்ரைவிங் டெஸ்ட் அப்பாயின்ட்மென்ட்களை முன்பதிவு செய்யலாம்!!! RTA அறிமுகம் செய்த புதிய சேவை….

துபாயில் இப்போது வாட்ஸ்அப் வழியாக ஓட்டுநர் சோதனை சந்திப்புகளை (driving test appointment) முன்பதிவு செய்து மறுதிட்டமிடுவதற்கான புதிய சேவையானது சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் (RTA) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சி பல்வேறு சேவைகளை டிஜிட்டல் தளங்களில் வழங்கும் RTA இன் உத்தியுடன் ஒத்துப்போகிறது.

பயனர்கள் RTAவின் “Mahboub” சாட்போட் மூலம் இந்தச் சேவையை அணுகலாம் என்றும், இதில் உங்களால் விரைவாகவும் பாதுகாப்பாகவும் அப்பாயின்ட்மென்ட்களை முன்பதிவு செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

“Mahboub” வாட்ஸ்அப் சேனல் மூலம் 250க்கும் மேற்பட்ட தகவல் மற்றும் நடைமுறைச் சேவைகளை RTA வழங்குவதாக கூறப்படுகின்றது. இந்த சேவைகளில் பொது பார்க்கிங் கட்டணம் செலுத்துதல், வாகன உரிமையை புதுப்பித்தல் பற்றி விசாரித்தல், நோல் கார்டு சேவைகளை அறிமுகப்படுத்துதல், கடல் போக்குவரத்து சேவைகள் மற்றும் பல ஆகியவை அடங்கும்.

அத்துடன் பயனர்களின் மொபைல் எண்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் முன்பே அங்கீகரிக்கப்பட்டவை (pre-authenticated) என்பதால், RTA இன் இணையதளத்தைப் பார்வையிடவோ அல்லது அப்ளிகேஷனை பயன்படுத்தவோ தேவையில்லை என்று RTA இன் கார்ப்பரேட் டெக்னிக்கல் சப்போர்ட் சர்வீசஸ் பிரிவில் உள்ள ஸ்மார்ட் சர்வீசஸ் துறையின் இயக்குநர் மீரா அகமது அல் ஷேக் என்பவர் கூறியுள்ளார்.

இந்தச் சேவையானது பயனர்கள் தங்கள் ஓட்டுநர் சோதனை சந்திப்புகளை திட்டமிடலாம் மற்றும் முன் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு மூலம் சேவைக் கட்டணங்களைச் செலுத்தலாம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

“Mahboub” சாட்பாட் ஆனது, RTA இன் தகவல், நடைமுறைகள் தொடர்பான வாடிக்கையாளர்களின் வினவல்களை கையாளும் மற்றும் இதில் உள்ள கற்றல் அம்சம் முந்தைய உரையாடல்களிலிருந்து கற்றுக்கொள்ள உதவும் என்று கூறப்படுகிறது.

மேலும், இந்த சேவைகள் “Mahboub” Chatbot மூலம் நேரடியாக தொடர்புடைய கட்டணங்களை செலுத்துவதற்கு உதவும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது அரபு மற்றும் ஆங்கில மொழிகளில் கிடைக்கிறது, எனவே அமீரகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள பயனர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RTA வெளியிட்டுள்ள தகவல்களின் படி, மனித மொழிகளை நன்கு புரிந்து கொள்ளவும், மனிதர்களைப் போன்ற துல்லியமான பதில்களை உருவாக்கவும் “Mahboub” பயன்படுத்தும் AI நுட்பங்களை மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!