அமீரக செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து அலர்ட்: அபுதாபியின் பிரதான சாலையில் இன்று முதல் பகுதி சாலை மூடல்!!

அமீரக தலைநகர் அபுதாபியில் உள்ள பிரதான சாலையின் ஒரு பகுதி இன்று (வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 2) முதல் மூடப்படும் என்று ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ITC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பிப்ரவரி 2 இரவு 10 மணி முதல் பிப்ரவரி 4, ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி வரை E22 அபுதாபி-அல் அய்ன் சாலையில் பகுதி மூடல் அமலில் இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, அல் அய்னை நோக்கிச் செல்லும் இரண்டு இடது பாதைகளும் மூடப்படும் என்று வாகன ஓட்டிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, வாகன ஓட்டிகள் கவனமாக செயல்படுமாறும், போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறும் அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.

மூடப்பட்ட பகுதியைக் குறிக்கும் வரைபடம்:

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!