அமீரக செய்திகள்

UAE: விசிட் விசாவில் வந்தவர்கள் நாட்டிற்கு திரும்பாமல் விசாவை நீட்டித்துக் கொள்வது எப்படி..??

வெளிநாடுகளில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விசிட் விசாவில் வர கூடியவர்கள், தங்களின் விசா காலம் முடிந்து விட்டால், இனி வரும் நாட்களில் அதனை புதுப்பித்துக்கொள்ளவோ, அல்லது விசா காலத்தை நீட்டித்து கொள்ளவோ முடியாது என்ற புதிய அறிவிப்பு ஒன்றை அமீரக அரசு சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

இந்த விசிட் விசா நீட்டிப்பு தொடர்பான திருத்தப்பட்ட விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், டிராவல் நிறுவனங்கள் இப்போது விசாவை புதுப்பிப்பதற்கான மூன்று விருப்பங்களை வழங்குகின்றன. அவற்றைக் கீழே காணலாம்.

1. விசாவைப் புதுப்பிக்க தரைவழியாக அமீரகத்தை விட்டு வெளியேறுபவர்கள்  

இந்த நிலையில், விசாவை புதுப்பிக்க விரும்புபவர்கள் பஸ் மூலம் நாட்டை விட்டு வெளியேறி ஓமான் செல்ல வேண்டும் என்றும் அதன்பிறகு, ஐக்கிய அரபு அமீரகத்திற்கான விசிட் விசா விண்ணப்பிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது வழங்கப்பட்டவுடன் அவர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மீண்டும் திரும்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலா விசாவைப் புதுப்பிக்க ஓமானுக்கு பஸ் பயணம் மலிவான வழி என்றும் கூறப்படுகின்றது. இருப்பினும், ஓமானுக்குள் நுழைய மக்களுக்கு விசா தேவைப்படும். அதைச் செயல்படுத்த 2 நாட்கள் வரை ஆகும். ஓமானிற்கான பயணம் ஏற்பாடு செய்யப்பட்டவுடன், ஐக்கிய அரபு அமீரகத்திற்கான விசா அதே நாளில் வழங்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.

மேலும் அமீரகத்தின் விசா நீட்டிப்பிற்காக ஓமானுக்கு மேற்கொள்ளப்படும் பஸ் பயணம் மிகவும் சிக்கனமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. நாட்டை விட்டு வெளியேறாமல் விசா நீட்டிப்பு

அமீரகத்தில் விசா நீட்டிப்பிற்கு அமீரகத்தை விட்டு வெளியேறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அமீரகத்தை விட்டு வெளியேறாமல் தங்கள் அமீரக சுற்றுலா விசாவை புதுப்பிக்க துபாயில் முடியும். அதாவது, ​​நாட்டிற்குள் விசா மாற்றம் துபாயில் மட்டும் தற்பொழுது வரை நடைமுறையில் உள்ளது. இருப்பினும், துபாய் இமிகிரேஷன் அதன் சிஸ்டமை புதுப்பிக்கும் வரை மட்டுமே இது கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான பயணம் மூலம் விசா நீட்டித்தல்

விசாவை புதுப்பிக்க சில மணிநேரங்களுக்கு கத்தார், பஹ்ரைன் போன்ற அண்டை நாட்டிற்கு பயணம் செய்து சில மணி நேரங்களில் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்கலாம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!