ஷார்ஜா-மஸ்கட் புதிய பஸ் சேவை..!! பிப்ரவரி 27 முதல் தொடக்கம் என அறிவிப்பு..!!
ஓமானின் தேசியப் போக்குவரத்து நிறுவனமான Mwasalat, அமீரகம் மற்றும் ஓமானை இணைக்கும் வகையில், ஷார்ஜா-மஸ்கட் இடையே ஒரு புதிய பேருந்து சேவை தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
ஷார்ஜாவின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்துடன் புதிய பேருந்து சேவையைத் தொடங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் Mwasalat கையெழுத்திட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய பேருந்து சேவை, பிப்ரவரி 27 முதல் தினசரி இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஷார்ஜா மற்றும் மஸ்கட்டில் இருந்து ஷினாஸ் வழியாக தலா இரண்டு சேவை என்ற கணக்கில் மொத்தம் நான்கு பயணங்கள் (trips) இருக்கும் என்று கூறப்படுகிறது. Mwasalat இன் படி, பயணிகளின் செக்-இன் பேக்கேஜ்கே் 23 கிலோ வரையிலும், 7 கிலோ ஹாண்ட் பேக்கேஜாகவும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. மேலும், டிக்கெட் கட்டணங்கள் 10 ஓமான் ரியால்கள் (95.40 திர்ஹம்ஸ்) மற்றும் 29 ஓமான் ரியால்கள் (276.66 திர்ஹம்ஸ்) இலிருந்து தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சேவை நேரம்:
ஷார்ஜாவில் இருந்து முதல் பேருந்து காலை 6.30 மணிக்கு அல் ஜுபைல் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 2.30 மணிக்கு அஸைபா பேருந்து நிலையத்தை சென்றடையும்.
இரண்டாவது பஸ் ஷார்ஜாவில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு இரவு 11.50 மணிக்கு மஸ்கட்டை சென்றடையும்.
இதற்கிடையில், மஸ்கட்டில் இருந்து முதல் பேருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு மாலை 3.40 மணிக்கு ஷார்ஜாவை சென்றடையும். இரண்டாவது பேருந்து மஸ்கட்டில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 1.10 மணிக்கு அல் ஜுபைல் பேருந்து நிலையத்தை சென்றடையும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel