UAE: அபுதாபியில் உள்ள சுகாதார மையத்திற்கு 1 மில்லியன் திர்ஹம் அபராதம் விதித்த சுகாதாரத்துறை!! மீறலில் ஈடுபட்ட எட்டு சுகாதார மையங்கள் மூடல்…..

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சுகாதாரத் துறை (DoH) அபுதாபியில் உள்ள ஒரு சுகாதார மையத்திற்கு 1 மில்லியன் திர்ஹம் அபராதம் விதித்துள்ளது. மேலும், மோசடி சந்தேகத்தின் அடிப்படையில் அந்த மையத்தில் உள்ள பல மருத்துவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
பொது நிதியை தவறாகப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சந்தேகத்திற்கிடமான மோசடி நடவடிக்கைகள் காரணமாக அனைத்து கிளைகளிலும் பல் மருத்துவ சேவைகளை வழங்குவதற்கு இந்த மையத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது, அத்துடன் எதிர்காலத்தில் இந்த சேவைகளை வழங்குவதில் இருந்து அவர்களை திறம்பட தடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, தொற்று நோய்களைத் தடுப்பது தொடர்பான சட்டத்தை மீறிய எட்டு சுகாதார மையங்களும் சுகாதாரத் துறையால் மூடப்பட்டுள்ளது. அதேபோல், துறையின் தரநிலைகள் மற்றும் வீட்டு பராமரிப்பு சேவைகளை நிர்வகிக்கும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்கத் தவறிய நான்கு வீட்டு பராமரிப்பு மையங்களும் மூடப்பட்டுள்ளன.
மேலும், கிருமி நீக்கத்திற்கான நெறிமுறைகளை கடைபிடிக்காதது உள்ளிட்ட பல மீறல்கள் நிரூபிக்கப்பட்ட பின்னர், ஒரு பல் மருத்துவமனையும் அதிகாரத்தால் மூடப்பட்டுள்ளது.
சுகாதார மையங்களில் கண்டுபிடிக்கப்பட்ட விதிமீறல்கள்:
- தொற்று நோய்களின் வழக்குகளைப் புகாரளிக்கத் தவறியது
- இ-ரிப்போர்ட்டிங் விதிமுறைகளுக்கு இணங்காதது
- அவசரகால நிகழ்வுகளுக்கு மருந்துகள் அல்லது பொருட்களை வழங்காதது
- தொற்றுநோயைத் தடுக்கத் தவறியது
- மருத்துவ பதிவுகளை பாதுகாப்பாக வைத்திருக்கத் தவறியது.
- வீட்டு பராமரிப்பு சேவைகளின் தரநிலைகள் மற்றும் விதிமுறைகளை மீறியது
- சிகிச்சைக்காக நோயாளியின் ஒப்புதலைப் பெறாமல் இருந்தது.
- சிகிச்சை தொடர்பான நடைமுறைகள் மற்றும் அபாயங்களை தெளிவுபடுத்தவில்லை
- சுகாதாரத் துறையிடம் உரிமம் பெற்ற சுகாதார நிபுணர்களை பணியமர்த்தவில்லை.
இதனைத் தொடர்ந்து அபுதாபியில் மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்கவும், சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப சுகாதார சேவைகளை தொடர்ந்து வழங்கவும், எமிரேட்டில் செயல்படும் அனைத்து சுகாதார வசதிகளுக்கும் DoH அழைப்பு விடுத்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel