அமீரக செய்திகள்

துபாய்: ரமலானில் பார்க்கிங், மெட்ரோ, பஸ் செயல்படும் நேரங்களை வெளியிட்ட RTA..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் புனித ரமலான் மாதமானது நாளை மறுநாள் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமீரகத்தின் பிறை பார்க்கும் கமிட்டியும் நாளை ஞாயிற்றுக்கிழமை பிறை பார்க்குமாறு குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில், புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு துபாயில் கட்டண வாகன நிறுத்துமிடங்கள், பொது பேருந்துகள், துபாய் மெட்ரோ, டிராம் மற்றும் கடல் போக்குவரத்து உள்ளிட்டவை செயல்படும் நேரங்களை RTA அறிவித்துள்ளது.

இது குறித்து துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) இன்று சனிக்கிழமை தனது சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2024 ம் ஆண்டின் ரமலான் மாதம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு வசதிகள் முதல் பார்க்கிங் கட்டணம் வரை என அனைத்து வசதிகளும் செயல்படும் புதிய நேர அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன் முழு விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொது பார்க்கிங்

துபாயில் உள்ள அனைத்து பார்க்கிங் மண்டலங்களுக்கும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையும், பின்னர் இரவு 8:00 மணி முதல் 12:00 மணி வரை (நள்ளிரவு) வரை கட்டணம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் TECOM பார்க்கிங் மண்டலத்திற்கு (F) காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை கட்டணம் விதிக்கப்படும் என்றும் மல்டி லெவல் கார் பார்க்கிங் 24/7 என முழு நேரமும் கட்டணம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ

மெட்ரோ செயல்படும் நேர அட்டவணையில் மாற்றம் இல்லை.

ரெட் லைன் மற்றும் கிரீன் லைன் நிலையங்கள்:

  • திங்கள் – வியாழன்: அதிகாலை 05:00 மணி – நள்ளிரவு 12 மணி வரை.
  • வெள்ளிக்கிழமை அதிகாலை 05:00 மணி – நள்ளிரவு 1:00 மணி வரை.
  • சனிக்கிழமை அதிகாலை 05:00 மணி – நள்ளிரவு 12:00 மணி வரை
  • ஞாயிறு காலை 08:00 – நள்ளிரவு 12:00 மணி வரை.

டிராம்

டிராம் நேர அட்டவணையிலும் எந்த மாற்றமும் இல்லை.

  • திங்கள் – வியாழன் : காலை 06:00 மணி – நள்ளிரவு 01:00 மணி வரை
  • ஞாயிறு காலை 09:00 மணி – நள்ளிரவு 01:00 மணி வரை.

துபாய் பேருந்து

அனைத்து மெட்ரோ இணைப்பு வழித்தடங்களின் அட்டவணைகளும் மெட்ரோ அட்டவணைகளுடன் ஒத்திசைக்கப்படும். இதனடிப்படையில் துபாய் பேருந்து நேரங்கள் பின்வருமாறு செயல்படும்:

  • திங்கள் – வெள்ளி : அதிகாலை 04:30 மணி – நள்ளிரவு 12:30
  • சனி – ஞாயிறு : காலை 06:00 – நள்ளிரவு 1:00 மணி

தற்போது இயங்கும் நகரங்களுக்கு இடையேயான பேருந்து வழித்தடங்கள்:

  • (E16) அல் சப்காவிலிருந்து ஹத்தா வரை
  • (E100) அல் குபைபாவிலிருந்து அபுதாபி வரை
  • (E101) இபின் பதூதாவிலிருந்து அபுதாபி வரை
  • (E102) அல் ஜாஃபிலியாவிலிருந்து முசாஃபா ஷபியா வரை
  • (E201) அல் குபைபாவிலிருந்து அல் ஐன் வரை
  • (E303) யூனியன் ஸ்டேஷனிலிருந்து ஷார்ஜாவில் ஜுபைல் வரை
  • (E306) அல் குபைபாவிலிருந்து ஷார்ஜாவில் ஜுபைல் வரை
  • (E307) தேரா சிட்டி சென்டரிலிருந்து ஷார்ஜாவில் உள்ள ஜுபைல் வரை
  • (E307A) அபு ஹைலிலிருந்து ஜுபைல் வரை ஷார்ஜாவில்
  • (E315) எடிசலாட் நிலையத்திலிருந்து ஷார்ஜாவில் முவைலே வரை,
  • (E400) யூனியன் ஸ்டேஷனிலிருந்து அஜ்மான் வரை
  • (E411) எடிசலாட் நிலையத்திலிருந்து அஜ்மான் வரை
  • (E700) யூனியன் ஸ்டேஷனிலிருந்து ஃபுஜைரா வரை.

வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள்

திங்கள் முதல் வியாழன் வரை உம்மு ரமூல், தேரா, அல் பர்ஷா, அல் தவார் மற்றும் அல் மனாரா: காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, மற்றும் வெள்ளிக்கிழமை காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை செயல்படும்.

மேலும் உம் ரமூல், தேரா, அல் பர்ஷா, அல் கிஃபாஃப் மற்றும் RTA இன் தலைமையகத்தின் ஸ்மார்ட் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் வழக்கம் போல் 24 மணி நேரமும் செயல்படும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!