அமீரக செய்திகள்

UAE: ஈத் அல் அதாவை முன்னிட்டு 737 கைதிகளை விடுவிக்க அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உத்தரவு..!

ஈத் அல் அதாவை முன்னிட்டு அமீரகத்ல் 737 கைதிகளை விடுவிக்க மாண்புமிகு அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உத்தரவிட்டுள்ளார். மேலும் விடுவிக்கப்பட்ட கைதிகளின் நிதிக் கடமைகளை தீர்ப்பதாக ஷேக் முகமது பின் சயீத் உறுதியளித்தார்.

அதிபரின் மனிதாபிமான மற்றும் சகிப்புத்தன்மையின் மதிப்புகளின் அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 737 கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர். இந்த விடுவிப்பானது அவர்களின் குடும்பங்களுக்கும், சமூகத்திற்கும் சாதகமாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

ஈத் அல் அதாவை முன்னிட்டு கைதிகளின் இந்த விடுவிப்பால், அவர்களது குடும்ப உறவிகளுக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள், விடுவிக்கப்பட்ட கைதிகள் தங்கள் எதிர்காலத்தை மறுபரிசீலனை செய்து வெற்றிகரமான சமூக மற்றும் தொழில்முறை வாழ்க்கையை நடத்துவதற்கான வாய்ப்பை அமீரகம் அளிக்கிகிறது. மன்னிப்பு, சகிப்பு, குடும்ப ஒற்றுமை, பிணைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டே அதிபர் கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!