அமீரக செய்திகள்

இரு வாரங்களுக்கு மிகவும் பிஸியாகும் துபாய் ஏர்போர்ட்.. விமான பயணிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன..??

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு நீண்ட நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால், ஏப்ரல் 2 முதல் 15 வரை துபாய் விமான நிலையமானது (DXB) முக அதிகளவில் பயணிகள் போக்குவரத்தை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை 3.6 மில்லியனை எட்டும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வருடம் ஈத் அல் ஃபித்ர் விடுமுறையுடன் பள்ளி மாணவர்களுக்கு வசந்த கால விடுமுறையும் (spring holidays) சேர்ந்து வருவதால் விடுமுறையை அனுபவிக்க தாய் நாட்டிற்கு செல்பவர்கள், துபாய்க்கு வருபவர்கள் என ஏராளமானோர் DXB-யை பயன்படுத்த உள்ளனர்.

ஆகவே, இந்த விடுமுறைக் காலத்தில், விமான நிலையத்தின் தினசரி போக்குவரத்து சராசரியாக 258,000 பயணிகளுக்கு அதிகமாக இருக்கும் என்றும், மேலும் வார இறுதி நாட்களில் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, ஏப்ரல் 13, சனிக்கிழமை மொத்த பயணிகளின் எண்ணிக்கை சுமார் 292,000ஐ தொடும் என எதிர்பார்க்கப்படுவதால், அன்றைய தினம் மிகவும் பிஸியான நாளாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விடுமுறைக் காலத்தில் விமான நிலையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பயணிகள் தங்கள் பயணத்தை சீராகத் தொடங்கவும் DXB பின்வரும் சில உதவிக் குறிப்புகளை வெளியிட்டுள்ளது. அவை

  • எமிரேட்ஸ் விமானத்தில் பயணிக்கும் பயணிகள் விமான நிறுவனத்தின் கண்வீனியன்ட் ஹோம் செக் இன், சுய செக்-இன் வசதிகள், சிட்டி செக்-இன் விருப்பங்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • flydubai பயணிகள் புறப்படுவதற்கு குறைந்தது நான்கு மணி நேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்திற்கு வர வேண்டும்.
  • மற்ற விமானங்களில் பயணிப்பவர்கள் புறப்படும் நேரத்திற்கு மூன்று மணிநேரத்திற்கு முன்னதாக DXB-க்கு வர முயற்சிக்க வேண்டும். நேரத்தை மிச்சப்படுத்த அவர்கள் ஆன்லைனில் செக்-இன் செய்யலாம்.
  • 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் ஸ்மார்ட் கேட்ஸைப் பயன்படுத்தி பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு செயல்முறையை விரைவாகவும் எளிதாகவும் முடிக்கலாம்.
  • இவை தவிர, உங்கள் லக்கேஜ்களை வீட்டில் முன்கூட்டியே எடைபோடவும், ஆவணங்களை முன்கூட்டியே ஒழுங்கமைக்கவும் மற்றும் தாமதங்களைக் குறைக்க பாதுகாப்பு சோதனைகளுக்கு தயாராகவும்.
  • சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், டெர்மினல்கள் 1 மற்றும் 3 க்கு இடையில் விமான நிலையத்திற்குச் செல்வதற்கும் வருவதற்கும் துபாய் மெட்ரோவைப் பயன்படுத்தவும்.
  • டெர்மினல்கள் 1 மற்றும் 3 ஆகிய இரண்டிலும் உள்ள அரைவல் பகுதியின் முன்பகுதிகளுக்கு பொது போக்குவரத்து மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விமான நிலைய வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
  • பயணிகளை அழைத்துச் செல்ல வரும் நபர்கள் DXBயின் நியமிக்கப்பட்ட கார் பார்க்கிங் அல்லது வாலட் சேவைகளைப் பயன்படுத்த வேண்டும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!