ADVERTISEMENT

UAE: இனி பாஸ்போர்ட்டில் ரெசிடென்ஸி விசா ஸ்டாம்ப் செய்ய தேவையில்லை..!! எமிரேட்ஸ் ஐடி ஒன்றே போதும்..!! அமலுக்கு வரும் புதிய நடைமுறை..!!

Published: 5 Apr 2022, 6:43 AM |
Updated: 5 Apr 2022, 8:30 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வெளிநாட்டவர்கள் இனி தங்கள் பாஸ்போர்ட்டில் ரெசிடென்ஸி விசாவை ஸ்டாம்ப் செய்ய வேண்டிய அவசியமில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில் ஏப்ரல் 11க்குப் பிறகு வழங்கப்படும் ரெசிடென்ஸ் ஆவணங்களுக்கு இது பொருந்தும் என தற்பொழுது கூறப்பட்டுள்ளது.  

அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையம் வெளியிட்ட சுற்றறிக்கையை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், குடியிருப்பாளர்களின் எமிரேட்ஸ் ஐடி அவர்களின் ரெசிடென்ஸி விசாவாக கணக்கிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த எமிரேட்ஸ் ஐடியில் ரெசிடென்ஸி தொடர்புடைய அனைத்து தகவல்களும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிறுவனங்கள் குடியிருப்பாளர்களின் எமிரேட்ஸ் ஐடி மற்றும் பாஸ்போர்ட் எண் மூலம் ரெசிடென்ஸியை சரிபார்க்க முடியும். இந்த நடவடிக்கையானது நாட்டில் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது மற்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ரெசிடென்ஸி விசா என்பது வெளிநாட்டவர்களின் பாஸ்போர்ட்டில் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு முத்திரையிடப்படும் ஸ்டிக்கர் ஆகும். இது குடியிருப்பாளரின் விசாவைப் பொறுத்து இரண்டு, மூன்று, ஐந்து அல்லது 10 வருட காலத்திற்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.