அமீரக செய்திகள்

UAE: அதிவேகமாக வாகனம் ஓட்டினால் 3,000 திர்ஹம் வரை அபராதம்….விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ள ராஸ் அல் கைமா..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து விபத்துகளுக்கு முக்கியக் காரணமாக இருக்கும் அதிவேகம் மற்றும் கவனக்குறைவு போன்ற செயல்பாடுகளுக்கு எதிராக ராஸ் அல் கைமா காவல்துறை புதிய இரண்டு வார விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

இந்தப் பிரச்சாரம் ராஸ் அல் கைமா காவல்துறையின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அலி பின் அல்வான் அல் நுஐமி அவர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தொடங்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, ‘Speeding is your wrong decision’ என்ற முழக்கத்தின் கீழ் நடைபெறும் இந்த இயக்கம், அதீத வேகம் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் அபாயகரமான போக்குவரத்து விபத்துகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

எமிரேட்டில் உள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு சாதனங்கள் பல வேக விதிமீறல்களைப் பிடித்துள்ளதாக ராஸ் அல் கைமா காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்து துறையின் இயக்குனர் கர்னல் டாக்டர் முஹம்மது அல் பஹார் என்பவர் கூறினார்.

மேலும், போக்குவரத்து சட்டத்தின்படி, வேக வரம்பை மணிக்கு 80 கி.மீ.க்கு மேல் சென்றால், 3,000 திர்ஹம் அபராதம், 23 பிளாக் பாயிண்ட்கள் மற்றும் 60 நாட்களுக்கு வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

அதேபோல், வேக வரம்பை 60 கிமீ/மணிக்கு மேல் மீறினால் 2,000 திர்ஹம் அபராதமும் 12 பிளாக் பாயிண்டுகளும் விதிக்கப்படுவதுடன் 30 நாட்களுக்கு வாகனத்தை பறிமுதல் செய்யப்படும்.

எனவே, அதிக போக்குவரத்து நெரிசலைக் காணும் நெடுஞ்சாலைகள் மற்றும் உள் வீதிகளில் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!