அமீரக செய்திகள்

அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு 1,018 சிறை கைதிகளை விடுதலை செய்ய உத்தரவிட்ட அமீரக தலைவர்..!!

1971 ஆம் ஆண்டில் ஏழு எமிரேட்டுகள் ஒன்றிணைந்து ஐக்கிய அரபு அமீரகம் என உருவானதைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் யூனியன் தினம் என்றும் அழைக்கப்படும் அதன் தேசிய தினத்தை கொண்டாடி வருகின்றது. இந்த தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அமீரக தலைவர்கள் நன்னடத்தையை மேற்கொண்டு வரும் சில சிறை கைதிகளை விடுவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், நாட்டின் தேசிய தினத்தை முன்னிட்டு, பொது மன்னிப்புக்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் 1,018 கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குவதற்காக ஷேக் முகமதுவின் ஆர்வத்தின் கட்டமைப்பிற்குள் இந்த விடுதலை உத்தரவு வருகிறது.

இதனையடுத்து பொதுமன்னிப்பு உத்தரவுக்கு உட்பட்டவர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களிடம் விரைவில் திரும்புவதை உறுதிசெய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுத்துள்ளனர் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!