உலக செய்திகள்

தென் கொரியாவில் ஒரே நாளில் 813 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!! பீதியில் மக்கள்!!

கொரோனா வைரஸின் தாக்கம் மிகப்பெரிய அளவில், மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. கடந்த ஆண்டின் இறுதியில் மத்திய சீன நகரமான வுஹானில் இது முதன்முதலில் கண்டறியப்பட்டதிலிருந்து உலகளவில் 2,900 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மற்றும் 85,000 க்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான நோய்த்தொற்றுகள் சீனாவில் மட்டுமே இருந்தன. ஆனால் இப்போது தினசரி அதிகமான நோய்த்தொற்று வழக்குகள் அந்நாட்டிற்கு வெளியே பதிவு செய்யப்பட்டுள்ளன. தென் கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் ஆகியவை அவற்றுள் முக்கிய இடங்களாக உருவாகின்றன.

சீனாவிற்கு அடுத்த படியாக, தென் கொரியாவில் கொரோனா வைரஸின் பாதிப்புகள் அதிகமாக உள்ளன. இந்நாட்டில் இன்று மட்டுமே, 813 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இன்று மட்டும் மூன்று பெண்கள் இந்த நோய் பாதிப்பால் இறந்துள்ளனர். இது வரை உள்ள நிலையை விட இந்த ஒரு நாளில் மட்டுமே தென் கொரியாவில், மிகப்பெரிய அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன்படி இதுவரை 3,150 பேர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது வரை 17 பேர் இறந்துள்ளனர்.

புதிய வழக்குகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை, நாட்டின் நான்காவது பெரிய நகரமான டேகு (Daegu) மற்றும் அதன் அண்டை மாகாணமான வடக்கு கியோங்சாங்கில் (North Gyeongsang) உள்ளன என்று கொரிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்(Korean Centers for Disease Control and Prevention) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளன.

தென் கொரியா சனிக்கிழமையன்று புதிய கொரோனா வைரஸ் வழக்குகளில் மிகப் பெரிய எழுச்சியைப் பதிவுசெய்தது. இதன் மூலம் உலக சுகாதார அமைப்பு(WHO) கொரோனா வைரஸின் ஆபத்து எச்சரிக்கையை மிக உயர்ந்த மட்டத்திற்கு உயர்த்தியது.

இந்த வைரஸ் கடந்த வாரத்தில் உலகம் முழுவதும் வேகமாக பரவியுள்ளது. இதனால் 2008 உலக நிதி நெருக்கடிக்குப் பின்னர் பங்குச் சந்தைகள் மிகக் குறைந்த மட்டத்தில் மூழ்கியுள்ளன. இந்த நோய் உலகப் பொருளாதாரத்தில் பேரழிவை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் உலக நாடுகள் உள்ளன.

சனிக்கிழமையன்று, தென் கொரியாவில் வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 73 வயதான பெண்மணி, மறுபரிசோதனை செய்த போது அவருக்கு இரண்டாவது முறையாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து அங்குள்ள மக்கள் மிகப் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!