நடிகர் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்… ரசிகர்கள் உற்சாகம்!!

விக்ரமின் பல விதத்தோற்றங்களில் உருவாகி வரும் கோப்ரா படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் (First Look Poster) தற்பொழுது வெளியாகியுள்ளது.

கோப்ரா படத்தின் போட்டோவை இசைப்புயல் AR ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் விக்ரம் நடித்து வரும் நிலையில் இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்றது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இதற்குண்டான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இப்படத்தின் First Look Poster வெளியாகி உள்ளது. இதில் விக்ரம் 7 விதத்தோற்றங்களில் காட்சியளிக்கிறார். ட்விட்டரில் இந்த ட்வீட்டை வெளியிட்ட ரஹ்மான் கோப்ரா படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார். இப்படத்தில், பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் நடிப்பது குறிப்பிடத்தக்கது.