தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67ஆக உயர்வு..!!! இன்று மட்டும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!!
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1071 ஆக உயர்ந்துள்ள வேளையில், தமிழகத்திலும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. தற்பொழுது தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழக முதல்வர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் ஏற்கெனவே 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது 67 ஆக அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார். தொடர்ந்து, கொரோனா வைரஸின் பாதிப்பையொட்டி, 1.5 கோடி மாஸ்க் மற்றும் அவசரகால உபகரணங்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் கொரோனாவிற்கான பணிகளை மேற்கொள்ள IAS அதிகாரிகள் கொண்ட பதினோரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மட்டும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருக்கிறது. மேலும், தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஒரு நபர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.