அமீரக செய்திகள்
UAE கொரோனா அப்டேட் (ஜனவரி 2, 2021) : பாதிக்கப்பட்டோர் 1,963 பேர்..!! குணமடைந்தோர் 2,081 பேர்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (சனிக்கிழமை, ஜனவரி 2, 2021) புதிதாக 1,963 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 211,641 ஆக உயர்ந்துள்ளது.
அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 674 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இன்றைய நாளில் மட்டும் 2,081 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 188,100 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.