குவைத், சிங்கப்பூரிலிருந்து இன்று தமிழகத்திற்கு செல்லும் இரு விமானங்கள்..!! சென்னை மற்றும் திருச்சி விமான நிலையத்தை சென்றடையும் எனத் தகவல்..!!
வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்கான மத்திய அரசின் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் முதல் வாரத்தில் தமிழகத்திற்கு இதுவரையிலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 360 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்னை வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து, சனிக்கிழமை மலேசியாவில் இருந்து ஒரு விமானம் மற்றும் அமெரிக்காவில் இருந்து ஒரு விமானத்தின் மூலமாக அங்குள்ள தமிழர்கள் அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில், முதல் வாரத்தின் நான்காம் நாளான இன்று சிங்கப்பூரிலிருக்கும் தமிழர்களை அழைத்து கொண்டு திருச்சி விமான நிலையத்திற்கு ஒரு விமானமும் குவைத்திலுள்ள தமிழர்களை அழைத்து கொண்டு சென்னை விமான நிலையத்திற்கு ஒரு விமானமும் இயங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்று இந்தியாவிற்கு செல்ல இருக்கும் பயணிகள் அனைவருக்கும் கொரோனாவிற்கான மருத்துவ ஸ்க்ரீனிங் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அவர்கள் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து செயல்முறைகளை முடிந்து குவைத்தில் இருந்து புறப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமானது இன்று இரவு சென்னை விமான நிலையத்தை சென்றடையும் எனவும் அதே போல் சிங்கப்பூரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்படும் விமானம் இன்று திருச்சி விமான நிலையத்தை சென்றடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
#VandeBharatMission Air India Express IX 396 ready to fly Chennai. Passengers started boarding the flight .@MEAIndia @IndianDiplomacy @DDNewslive @airindiain pic.twitter.com/ds06R2ogVx
— India in Kuwait (@indembkwt) May 10, 2020
இந்த விமானங்களில் பயணிப்பதற்கு முதியவர்கள், கர்ப்பிணிப்பெண்கள், மருத்துவ ரீதியிலான பிரச்னை உடையவர்கள், தங்கள் குடும்பத்தில் உயிரிழப்பை சந்தித்தவர்கள் போன்றவர்களுக்கே தாயகம் பயணிக்க முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகின்றது. இதே போல் திங்கள்கிழமை (நாளை) ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மலேசியா சென்று அங்குள்ள இந்தியர்களை அழைத்து வரவிருக்கிறது.
Indian nationals undergoing medical screening before boarding in flight from Kuwait to Chennai under #VandeBharatMission. #IndiansStrandedAbroad #StaySafe @DGCAIndia
Via @airnewsalerts pic.twitter.com/kMlO2LQWgh
— #IndiaFightsCorona (@COVIDNewsByMIB) May 10, 2020