அல் அய்ன், துபாய் உட்பட அபுதாபிக்கும் பிற நகரங்களுக்கும் இடையேயான இயக்கத்திற்கு முழு தடை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் இருந்து அபுதாபியின் எல்லைக்கு உட்பட்ட பிற நகரங்களான அல் அய்ன், அல் தஃப்ரா ஆகிய பகுதிகளுக்கும், மேலும் அபுதாபியிலிருந்து அமீரகத்தின் மற்ற நகரங்களான துபாய், ஷார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் இடையேயான இயக்கம் வரும் ஜூன் 2 ஆம் தேதி முதல் தடை செய்யப்படுவதாக அபுதாபி ஊடக அலுவலகம் ட்விட்டரில் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜூன் 2 செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் இந்த இயக்க தடையானது ஒரு வார காலத்திற்கு அமலில் இருக்கும் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியாக அபுதாபியில் மேற்கொள்ளவிருக்கும் தேசிய பரிசோதனை திட்டத்தை மேம்படுத்தும் விதமாக அபுதாபியின் அவசர மற்றும் பேரிடர் மேலாண்மை குழு, அபுதாபி காவல்துறை மற்றும் அபுதாபி சுகாதார துறை ஒன்றிணைந்து இந்த முடிவை அறிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமக்கள் உட்பட அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் இந்த தடை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய துறைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் சிறப்பு அனுமதி பெற்றவர்களுக்கு இந்த இயக்கத் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Abu Dhabi Emergency and Crisis Committee for the Covid-19 Pandemic, in collaboration with Abu Dhabi Police and DOH, have announced a ban on movement entering & exiting the emirate and between its regions (Abu Dhabi, Al Ain, & Al Dhafrah) starting from Tuesday 2 June, for 1 week. pic.twitter.com/IqPnbyVW86
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) May 31, 2020