வளைகுடா செய்திகள்

ரமலான் பிறையை பார்க்குமாறு இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள சவூதி அரேபியா..!!

ரமலான் துவங்க இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் வரும் செவ்வாய்கிழமை மாலை (மார்ச் 21 ம் தேதி, ஷபான் 29) புனித ரமலான் மாதத்தின் பிறையை பார்க்குமாறு முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. பிறையைப் பார்ப்பது புனித ரமலான் மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மார்ச் 19 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், உச்ச நீதிமன்றம் பிறையை வெற்றுக் கண்ணால் அல்லது தொலைநோக்கி மூலம் பார்ப்பவர்கள் அருகிலுள்ள நீதிமன்றத்தில் புகாரளித்து அதனை பதிவு செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

அதுதவிர, அவர்கள் பிறையைப் பார்த்த தங்கள் பகுதியில் உள்ள பிராந்திய மையத்தின் ஆணையத்திற்கு தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. வானியல் கணக்கீடுகளின் படி இந்த வருட ரமலான் மாதமானது வரும் மார்ச் 23 ம் தேதி தொடங்குவதாக கூறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் ஈத் அல் ஃபித்ரானது  வரும் ஏப்ரல் 21 ம் தேதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் இவை பிறை பார்ப்பதின் அடிப்படையிலேயே உறுதி செய்யப்படும். சவூதி அரேபியாவை பின்பற்றியே மற்ற வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், பஹ்ரைன் ஆகிய நாடுகள் ரமலானை வரவேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!