அமீரக சட்டங்கள்

அமீரகத்தில் வேலை கிடைத்துள்ளதா..?? உங்களின் உரிமைகள், வழங்க வேண்டிய ஆவணங்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை என்ன..??

ஐக்கிய அரபு அமீரகத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற வேலை கிடைத்துள்ளதா? அதற்கு நீங்கள் அமீரகத்திற்கு புறப்படுவதற்கு முன்பாக, உங்கள் முதலாளியிடம் இருந்து வேலை வாய்ப்புக் கடிதத்தை பெற வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அமீரகத்தில் புதிதாக வேலையில் சேரவிருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தொழிலாளர் உரிமைகள் மற்றும் வழங்க வேண்டிய ஆவணங்கள் பற்றிய வழிகாட்டுதல்களை இந்த பதிவில் காணலாம்.

அமீரகத்தில் வேலை தேடுதல்:

நீங்கள் உங்கள் தாய் நாட்டில் இருந்தவாறே அமீரகத்தில் வேலை தேடுவதற்கு வெவ்வேறு வழிகள் உள்ளன. நீங்கள் வசிக்கும் நாட்டில் உள்ள உள்ளூர் ஆட்சேர்ப்பு ஏஜென்சிகள் உங்கள் அனுபவத்திற்கு ஏற்ற வேலைவாய்ப்பைக் கண்டறிய உதவலாம் அல்லது அமீரகத்தை தளமாகக் கொண்ட நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் நீங்களே நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் ஏற்கனவே அமீரகத்தில் ஒரு வேலைவாய்ப்பைப் பெற்றிருந்தால், உங்களுக்கான பணி அனுமதி, ரெசிடென்சி விசா மற்றும் தொழிலாளர் அட்டை போன்ற பெரும்பாலான ஆவணங்களை உங்கள் முதலாளியே விண்ணப்பித்து பெற்றுத் தருவார் மற்றும் பணியமர்த்துதல் தொடர்பான செலவுகளையும் அவரே செலுத்துவார்.

 

நீங்கள் அமீரகத்தில் இருக்கும் பட்சத்தில், உங்கள் முதலாளி நீங்கள் வந்த 60 நாட்களுக்குள் ரெசிடென்சி விசா மற்றும் தொழிலாளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

உங்கள் பணி அனுமதி விண்ணப்பத்திற்கு தேவையான பின்வரும் ஆவணங்களை உங்கள் முதலாளி சமர்ப்பிப்பார்:

  • உங்கள் பாஸ்போர்ட்டின் நகல் (குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும்)
  • விசா விண்ணப்பப் படிவம்
  • பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம்
  • உங்கள் என்ட்ரி பெர்மிட் (நீங்கள் அமீரகத்திற்குள் நுழைந்த விசா)
  • சரியான சுகாதார சான்றிதழ்
  • உங்கள் வேலை ஒப்பந்தத்தின் மூன்று பிரதிகள்
  • கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஏதேனும் தொழில்முறை தகுதிகள்
  • வர்த்தக உரிமத்தின் நகல்

முதலாளி ஏற்க வேண்டிய செலவுகள்:

அமீரக சட்டத்தின்படி, உங்களின் வேலைவாய்ப்பு மற்றும் பணியமர்த்தல் தொடர்பான செலவுகளை உங்கள் முதலாளியே ஏற்க வேண்டும். அதாவது, உங்கள் நாட்டின் அரசாங்கத்தால் அங்கீகாரம் பெற்ற ஒரு தனியார் ஆட்சேர்ப்பு நிறுவனத்திற்கு செலுத்தப்படும் கட்டணங்கள், நுழைவு விசா மற்றும் அமீரக பயணத்திற்கான செலவுகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் போன்ற உங்கள் வருகைக்கான செலவுகள் அத்தனையும் இதில் அடங்கும்.

நீங்கள் கையெழுத்திட வேண்டிய ஆவணங்கள்:

நீங்கள் அமீரகத்திற்கு வருவதற்கு முன், வேலைவாய்ப்பு கடிதத்தை பெற்ற போது, ​​உங்களின் வேலை வாய்ப்புக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உங்கள் ஆட்சேர்ப்பு முகவர் அல்லது உங்கள் முதலாளியால் உங்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டிருக்க வேண்டும்.

எனவே, நீங்கள் அமீரகத்திற்கு செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தால், உங்களின் பதவி, பொறுப்புகள், சம்பளம், அலொவன்ஸ் மற்றும் வேலைக்கான விரிவான நிபந்தனைகள் உட்பட, வேலை வாய்ப்பின் முழு விதிமுறைகள் என அனைத்தையும் பற்றி தெரிந்து கொண்டு பின்னர் கையெழுத்திடுங்கள். அதேசமயம், உங்களின் வேலைவாய்ப்பு கடிதத்தை உங்கள் ஆட்சேர்ப்பாளரிடம் கேட்டு, அதை பத்திரமாக வைத்திருங்கள்.

நீங்கள் கையொப்பமிடுமாறு கேட்கப்படும் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் உங்கள் அசல் வேலை வாய்ப்பில் உள்ள அதே விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இருக்க வேண்டும். ஆனால், வெவ்வேறு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்படி உங்களிடம் கேட்கப்பட்டால், உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அறிவுறுத்தப்பட்டாலும், நீங்கள் அருகில் உள்ள MOHRE வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையத்திற்கு புகாரளிக்கவும் அல்லது 800 84 என்ற எண் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும்.

அமீரகத்தில் இது சட்டவிரோதமானதாகும். அதாவது நீங்கள் அசல் வேலை வாய்ப்புக்கு ஒப்புக்கொண்டபோது நீங்கள் ஒப்புக்கொண்ட அதே விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு மட்டுமே உட்பட உங்களுக்கு உரிமை உண்டு.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!