வளைகுடா செய்திகள்

சவுதி அரேபியாவில் தொடரும் ஆலங்கட்டி மழை..!! பனியை கையில் அள்ளி குதூகலிக்கும் குடியிருப்பாளர்கள்…!!

சவுதி அரேபியாவின் பெரும்பாலான பகுதிகளில் வானிலை மாற்றத்தால் ஆலங்கட்டி, புயல், மழை மற்றும் பனிப்பொழிவு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. சவூதி அரேபியாவின் தெற்கில் ஏமன் எல்லையில் அமைந்துள்ள நஜ்ரான் பகுதி, ஈத் அல் ஃபித்ர் விடுமுறையின் போது, ​​​​கனமழை மற்றும் ஆலங்கட்டிகள் வெள்ளை நிறத்தில் மூடப்பட்டதால் பார்ப்பதற்கு பனி பிரதேசம் போல் காட்சியளித்திருக்கின்றது.

பத்ர் அல் ஜனூப், தார், கபாஷ், பீர் அஸ்கர், ஆகிஃபா, அல் சுஃபா மற்றும் ஹதாதா போன்ற மாகாணங்களின் பல பகுதிகள் மற்றும் பிராந்தியத்தின் மையங்களில் வானிலை நிலை காரணமாக பலத்த மழை பெய்தது எனவும் கூறப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியிட்ட வீடியோவில், ஆலங்கட்டி மழை பெய்ததனால் குடியிருப்பாளர்கள் கைகளில் பனியை அள்ளுவதைக் காணலாம். மேலும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நிலப்பரப்பு முழுவதும் பனியால் மூடப்பட்டிருப்பதைக் காணலாம். மற்ற வீடியோக்களில், ஈரமான சாலைகளில் கார்கள் செல்வதைக் காண முடிகிறது.

மேலும் எதிர்வரும் வியாழன் வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படும் இடங்களை பொதுமக்கள் தவிர்க்குமாறு குடிமைத் தற்காப்பு பொது இயக்குநரகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல், மக்கள் பனிப்பொழிவை ரசித்து தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்து வருகின்றனர். எவ்வாறாயினும், பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடைபிடிக்கவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகள் குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை பின்பற்றவும் அல்லது சீரற்ற வானிலையின் போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அத்துடன் சவுதி அரேபியாவின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) மக்கா, ரியாத், ஆசிர், அல்-பஹா, ஜசான், நஜ்ரான், அல்-காசிம், ஹைல், தபூக், மதீனா மற்றும் வடக்கு எல்லைகள் உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்யும் என்று கணித்துள்ளது. இந்த நேரத்தில் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க NCM குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!