ஜூலை மாதத்தில் மலேசியா, சிங்கப்பூரிலிருந்து தமிழகத்திற்கு செல்லும் விமானங்களின் விபரங்கள்..!!

வந்தே பாரத் திட்டத்தின் 4 ம் கட்ட நடவடிக்கைக்கான சிறப்பு விமானங்களின் பட்டியல் நேற்று ஜூலை மாதம் 1 ம் தேதி இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளான மலேஷியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு செல்லும் விமானங்களின் விபரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மலேசியாவில் இருந்து இந்தியா செல்லும் 8 விமானங்களில் 2 விமானங்கள் தமிழகத்திற்கும், அதேபோல் சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்லும் 6 விமானங்களில் 5 விமானங்கள் தமிழகத்திற்கும் செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவிலிருந்து இந்தியா செல்லும் இரண்டு விமானங்களும் தமிழகத்தில் உள்ள திருச்சி விமான நிலையத்திற்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து விமானங்களும் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு செல்லும் 5 விமானங்களும் திருச்சி, கோவை மற்றும் சென்னை ஆகிய நகரங்களுக்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் பயண தேதிகளின் விபரம்.. .

வரிசை எண் பயண தேதி புறப்படும் இடம் செல்லும் இடம்
1 ஜூலை  6, 2020 கோலாலம்பூர் திருச்சி
2 ஜூலை  13, 2020 கோலாலம்பூர் திருச்சி

சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் பயண தேதிகளின் விபரம்.. .

வரிசை எண் பயண தேதி புறப்படும் இடம் செல்லும் இடம்
1 ஜூலை  3, 2020 சிங்கப்பூர் திருச்சி
2 ஜூலை  6, 2020 சிங்கப்பூர் சென்னை
3 ஜூலை  9, 2020 சிங்கப்பூர் திருச்சி
4 ஜூலை  12, 2020 சிங்கப்பூர் திருச்சி
5 ஜூலை  14, 2020 சிங்கப்பூர் கோவை