ஓமான் : சுற்றுலா விசாக்கள் வேலிடிட்டி மார்ச் 2021 வரை நீட்டிப்பு..!! சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்..!!
கொரோனாவின் பாதிப்பையொட்டி ஏற்பட்ட சர்வதேச விமான போக்குவரத்து தடையினால் பல்வேறு அதே போல் நாடுகளில் வசிப்பவர்கள் தங்களின் தாய் நாடுகளுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் சுற்றுலா விசாவில் வேலை தேடி வந்த பலரும் தங்களின் விசா காலம் முடிந்த பின்னரும் தாய் நாட்டிற்கு செல்ல முடியாத நிலைமை உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு வளைகுடா தங்கள் நாடுகளில் வசிக்கக்கூடிய குடியிருப்பாளர்களுக்கும், சுற்றுலா மற்றும் விசிட் விசாவில் வந்து தற்போது அந்தந்த நாடுகளில் சிக்கிக் கொண்டவர்களுக்கும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமன் நாட்டிலும் தற்பொழுது இருக்கும் இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு அந்நாட்டின் சுற்றுலாத்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மார்ச் 1, 2020 முதல் ஆகஸ்ட் 31, 2020 வரையிலான இடைப்பட்ட காலங்களில் ஓமான் அரசால் வழங்கப்பட்ட சுற்றுலா விசாக்களின் செல்லுபடியாகும் காலம் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படும் என்று ஓமான் நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் அஹ்மத் அல் மெஹ்ரஸ் தெரிவித்துள்ளார்.
இரு தினங்களுக்கு முன்பு ஓமான் நாட்டில் வசிக்கக்கூடிய குடியிருப்பாளர்களின் அடையாள அட்டைகள், ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் பாஸ்போர்ட் காலாவதியானவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது எனவும், காவல்துறை தனது வாடிக்கையாளர் சேவைகளை மீண்டும் திறக்கப்படும் போது புதுப்பித்துக்கொள்ளலாம் எனவும் ஓமான் ராயல் போலீஸ் சார்பாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.