வளைகுடா செய்திகள்

ஓமான் : சலாலாவில் இருந்து முதன் முறையாக மதுரைக்கு சென்ற விமானம்..!!

ஓமான் நாட்டில் சிக்கி தவித்த தமிழர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையின் கீழ் இயக்கப்படும் தனி விமானம் மூலமாக சலாலா (Salala) நகரிலிருந்து மதுரைக்கு 180 பயணிகள் சென்றடைந்துள்ளதாக சலாலாவில் இருக்கும் இந்தியன் சோஷியல் கிளப் அறிவித்துள்ளது. இதுவே முதன் முறையாக சலாலாவில் இருந்து தமிழகத்திற்கு நேரடியாக இயக்கப்பட்ட விமானம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சலாலாவில் இருக்கும் இந்தியன் சோஷியல் கிளப் (ISC) மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட சலாம் ஏர் (Salam Air) சார்ட்டர் விமானத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 130 பயணிகளை சலலா விமான நிலையத்திலிருந்து ஏற்றி சென்றுள்ளதாகவும், மீதமுள்ள 50 பயணிகளை மஸ்கட்டில் இருந்து ஏற்றிக்கொண்டு சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ISC சலாலாவின் தலைவர் மன்பிரீத் சிங் கூறுகையில், “கொரோனாவின் தாக்கத்தினால் பல தமிழர்கள் பாதிக்கப்பட்டு தாயகம் செல்ல விரும்பிய காரணத்தினால் தமிழகத்தின் எந்த விமான நிலையமாக இருந்தாலும் அதில் செல்வதற்கு அதிகளவு நபர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர்” என்று கூறினார்.

எனவே இவ்வாறு தாயகம் செல்ல விரும்பும் அனைத்து பயணிகளின் விபரங்களையும் ISC பதிவு செய்து விமான சேவைக்காக விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டதாகவும், பின்னர் ஓமான் மற்றும் இந்திய அரசாங்கங்களின் ஒப்புதல்களைத் தொடர்ந்து, விமான அட்டவணை அறிவிக்கப்பட்டு பயணிகளின் தேவைகளின் அடிப்படையில் அவர்களுக்கு விமானத்திற்கான இடம் ஒதுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், பயணிகளில் அவசரகால நிலையுடையவர்கள் மற்றும் விசா பிரச்சினைகள், ரத்துசெய்தல், வேலை இழப்பு போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!