300க்கும் மேற்பட்ட பிராண்டுகளுக்கு 90% தள்ளுபடி..!! துபாய் மாலில் அதிரடி விற்பனை..!!
ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்தில் நடைபெறும் துபாய் சம்மர் சர்ப்ரைஸ் கொண்டாட்டமானது இந்த வருடம் கடந்த ஜூலை 9 ம் தேதி முதல் தொடங்கபட்டது. இதன்படி, துபாய் நகரம் முழுவதும் இருக்கக்கூடிய மால்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் சிறந்த தள்ளுபடி, அதிரடி விற்பனை மற்றும் விளம்பரங்கள், ஒப்பந்தங்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில், DSS நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கும் துபாயின் புகழ்பெற்ற துபாய் மாலில் இன்று அதிரடி தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. துபாய் மால் தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, துபாய் மாலில் இருக்கக்கூடிய 300 க்கும் மேற்பட்ட பிராண்டுகளில் 90 சதவீதம் வரை தள்ளுபடி அளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த 90 சதவீத தள்ளுபடியானது இன்று (ஜூலை 30) ஒரு நாள் மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram