வளைகுடா செய்திகள்
கத்தார் : நான்காம் கட்டத்தில் தமிழகத்திற்கு 3 விமானங்கள்.!! புதிய பட்டியல் வெளியீடு..!!
வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்டத்திற்கான விமானங்களின் பட்டியலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த நான்காம் திட்ட அட்டவணையின்படி, கத்தார் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு மட்டும் 51 விமானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் முதல் விமானம் வரும் ஜூலை மாதம் 7 ம் தேதி முதல் இந்தியாவிற்கு இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கத்தாரிலிருந்து இந்தியாவிற்கு செல்லும் 51 விமானங்களில் 36 விமானங்கள் கேரளா மாநிலத்திற்கும், தமிழகம், கர்நாடகா, உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கனாவிற்கு தலா 3 விமானங்களும் இயக்கப்பட உள்ளன.
நான்காம் திட்டத்தில் கத்தாரிலிருந்து தமிழகத்திற்கு செல்லும் மூன்று விமானங்களும் சென்னை சர்வதேச விமான நிலையத்தை சென்றடைய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.