வளைகுடா செய்திகள்

சவுதி அரேபியா: ரியாத் மாகாணத்தில் பொதுமக்களின் வசதிக்காக புதிதாக 20 பூங்காக்கள் திறப்பு!!

சவுதி அரேபியா நாட்டின் ரியாத் மாநிலத்தில் 20 புதிய பொழுதுபோக்கு பூங்காக்கள் மக்களின் வசதிக்காக திறக்கப்பட்டுள்ளன. ரியாத் மாகாணத்தின் துணை ஆளுநரான இளவரசர் முகமது பின் அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஜிஸ் அவர்களின் ஆதரவின் கீழ், ரியாத் மாநில மேயர் இளவரசர் பைசல் பின் அப்துல்லாஜிஸ் பின் அய்யாஃப் முன்னிலையில், மாநிலத்தில் 20 பூங்காக்களைத் திறக்கும் விழா நடைபெற்றது.

பூங்காக்கள் 18 குடியிருப்பு மாவட்டங்களில் பரந்து விரிந்து 181,225 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளன.

ரியாத் மாநிலத்தின் கீழ்க்கண்ட பகுதிகளில் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன:

  • ராஜா பைசல்
  • ஜநாத்ரியாத்
  • தஹரத் லாபன்
  • அல்-மன்சூரா
  • திராப்
  • அல் நர்ஜிஸ்
  • அஷ் ஷுஹாதா
  • அல் யாஸ்மின்
  • அல் யர்முக்
  • அல் முன்சியா
  • அல் கலீஜ்
  • அல் காதிஸியா
  • கோர்டோபா
  • அல்-ரிமால்
  • அல் ரபீ
  • அல் முகரிசாத்
  • அல் உரைஜா
  • அல் கர்பியா
  • அல் அஜிசியா

பூங்காக்களின் மொத்த பரப்பளவு 50,000 சதுர மீட்டர் ஆகும், இதில் 7,000 மரங்கள் மற்றும் புதர்கள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும், மக்கள் நடைபயணம் மேற்கொள்வதற்கு ஏதுவாக 62,000 லீனியர் மீட்டருக்கும் அதிகமான பாதசாரி பாதைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பூங்காக்களில் 56 பொழுதுபோக்கு பகுதிகள் மற்றும் ஆறு விளையாட்டு மைதானங்கள் உள்ளன, அதனுடன் சுமார் 1,000 வாகனங்கள் நிறுத்தும் இடங்களும் பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களை கவர்வதற்கு ஏதுவாக 750 க்கும் மேற்பட்ட அலங்கார விளக்கு கம்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ரியாத் மாநிலத்தில் வாழும் மக்களுக்கு, இந்த சுற்றுலா பூங்காக்கள் விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன் பொழுதை கழிப்பதற்கு வசதியாக இருக்கும் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!