VBM : ஆகஸ்ட் 16 முதல் 31 வரை கத்தாரில் இருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் விபரங்கள்..!! முன்பதிவும் தொடக்கம்..!!

வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து செல்லும் வந்தே பாரத் திட்டத்தின் ஐந்தாம் கட்டத்தில் வரும் ஆகஸ்ட் 16 ம் தேதி முதல் 31 ம் தேதி வரை கத்தாரில் இருந்து இந்தியா செல்லும் விமானங்களுக்கான டிக்கெட்டை பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
கத்தார் நாட்டில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு சொந்தமான விமான நிறுவனங்களான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ ஆகிய விமான நிறுவனங்களின் மூலம் இயக்கப்படும் விமானங்களுக்கான டிக்கெட்டிற்கு இந்தியா செல்ல வேண்டி தூதரகத்தில் பதிவு செய்தவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 16 ம் தேதி முதல் 31 ம் தேதி வரை கத்தாரில் இருந்து இந்தியா செல்லும் விமானங்களில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களின் மூலம் 3 விமானங்கள் தமிழகத்திற்கும் இண்டிகோ விமானங்களின் மூலம் 5 விமானங்கள் தமிழகத்திற்கும் இயக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் www.airindiaexpress.in மற்றும் www.goindigo.in என்ற வலைத்தளங்களில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ நிறுவனம் மூலம் இயக்கப்படும் விமானங்களின் விபரங்கள்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் மூலம் இயக்கப்படும் விமானங்களின் விபரங்கள்
— India in Qatar (@IndEmbDoha) August 10, 2020