வளைகுடா செய்திகள்
ஹிஜ்ரி வருடப்பிறப்பை முன்னிட்டு பொது விடுமுறை அறிவித்த ஓமான் அரசு..!!
இஸ்லாமிய புத்தாண்டான ஹிஜ்ரி வருடம் (1442 AH) ஆரம்பிப்பதை முன்னிட்டு இஸ்லாமிய மாதங்களில் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் முதல் தேதி அன்று பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் பொது விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை முஹர்ரம் மாதத்தின் முதல் நாளாக அமைந்தால், வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23) அன்று விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பிறை பார்ப்பதை பொறுத்து இஸ்லாமிய புத்தாண்டு விடுமுறையானது வியாழக்கிழமையாகவோ அல்லது ஞாயிற்றுக்கிழமையாகவோ அறிவிக்கப்படும் என்றும் ஓமான் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
முஹர்ரம் மாதத்தின் முதல் நாளானது சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் பிறை பார்க்கப்பட்ட பின்னர் உறுதி செய்யப்படும் என்று ஓமான் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.