வளைகுடா செய்திகள்

ஓமான்: நாடு கடத்தப்பட்ட 180 வெளிநாட்டவர்கள்!! தொழிலாளர் சட்டத்தை மீறியதால் நடவடிக்கை…

ஓமான் சுல்தானகத்தில் 180க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் தொழிலாளர் சட்டத்தை மீறியதற்காக ஒரு வாரத்திற்குள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

தொழிலாளர் நலத்துறை பொது இயக்குநரகத்தால் (Directorate General of Labour Welfare) பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி,  புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் மற்றும் தொழிலாளர் சட்டத்தின் விதிமுறைகளுக்கு அவர்கள் இணங்குவதையும் கண்காணிப்பதற்காக, ஜூன் 18 முதல் ஜூன் 24, 2023 வரையிலான காலகட்டத்தில் மஸ்கட் கவர்னரேட்டில் ஆய்வுப் பிரச்சாரங்களை நடத்தியது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி, அமைச்சகம் நடத்திய ஆய்வுப் பிரசாரங்களில் சுமார் 152 வெளிநாட்டுத் தொழிலாளர்கள், தொழிலாளர் சட்டத்தின் விதிகளை மீறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 89 தொழிலாளர்கள் தங்கள் வேலையை விட்டு வெளியேறியதாக அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும், அவர்களின் விதிமீறல் நடத்தைகளுக்கு தக்க நடவடிக்கை எடுக்கும் பணி நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், 184 தொழிலாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!