வளைகுடா செய்திகள்

இரண்டே மாதங்களில் சுமார் 60,000 உயர்ந்த வெளிநாட்டு மக்கள் தொகை..!! ஓமான் தேசிய புள்ளியியல் மற்றும் தகவல் மையம் வெளியிட்ட தரவு..!!

2022 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ஓமானில் வெளிநாட்டவரின் எண்ணிக்கையானது சுமார் 60,000 உயர்ந்துள்ளதாக அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

57,870 வெளிநாட்டவர்கள் ஓமனுக்கு ஜனவரி 1, 2022 முதல் பிப்ரவரி இறுதி வரை வந்துள்ளனர் என்று தேசிய புள்ளியியல் மற்றும் தகவல் மையம் கூறியுள்ளது. 

அதற்கேற்ப, நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. டிசம்பர் 2021 இறுதியில் 1.409 மில்லியனாக இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை பிப்ரவரி 2022 நிலவரப்படி 1.461 மில்லியனாக அதிகரித்துள்ளது.

அரசாங்கத் துறையில் பணிபுரியும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையானது கணிசமாக குறைந்துள்ளது (10.7 சதவீதம்) பிப்ரவரி 2022 நிலவரப்படி 36,928 வெளிநாட்டவர்கள் அரசு துறையில் வேலை செய்து வருகின்றனர். இது 2021 இல் 37,996 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஓமானில் இருக்கும் அதிகளவு வெளிநாட்டவர்களில் பங்களாதேஷ் நாட்டவர்கள் முதலிடத்தில் உள்ளனர். அந்த நாட்டிலிருந்து 546,182 வெளிநாட்டவர்கள் ஓமானில் வசிக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து இந்தியர்கள் 490,114 மக்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர். அதற்கடுத்த படியாக பாகிஸ்தானில் இருந்து கணிசமான அளவு வெளிநாட்டவர்கள் (206,083) உள்ளனர். மேலும் பிலிப்பைன்ஸ் (46,240 பேர்), எகிப்து (31,817), இலங்கை (20,306), நேபாளம் (18,367), தான்சானியா (11,854) மற்றும் சூடான் (8,020) உட்பட பிற நாடுகளிலிருந்தும் மக்கள் குறிப்பிடத்தக்க அளவில் ஓமானில் வசிக்கின்றனர் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!