அமீரக செய்திகள்

அமீரகத்தில் நிலவும் மூடுபனி..!! வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில தினங்களாகவே மூடுபனி நிலவி வரும் பட்சத்தில் அமீரகத்தில் இன்றும் மூடுபனி தொடர்ந்து நிலவுவதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அறிவித்துள்ளது. இதன் காரணமாக தெரிவுநிலை (visibility) குறைவாக இருப்பதால் சிவப்பு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன.

அபுதாபி காவல்துறையினர் வாகன ஓட்டிகளை சாலையில் கவனமாக செல்லவும், மாறிவரும் வேக வரம்புகளை கவனித்து அதன்படி வாகனங்களை ஓட்டுமாறும் எச்சரித்துள்ளனர்.

மேலும் ஸ்வீஹான் சாலையில் (திலால் ஸ்வீஹான்-அல் ஃபயா பிரிட்ஜ்) வேக வரம்பு மணிக்கு 80 கி.மீ ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இன்று அபுதாபி மற்றும் துபாயில் வெப்பநிலை முறையே அதிகபட்சமாக 38 ° C மற்றும் 40 ° C ஐ எட்டும் என்றும், குறைந்த பட்சமாக 28 ° C மற்றும் 30 ° C ஆக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன்  லேசானது முதல் மிதமாக வீசும் காற்றின் காரணமாக பகலில் தூசி வீசும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!