Covid19: 11 நாடுகளுக்கு விதித்திருந்த பயணத் தடையை நீக்கியது சவூதி அரேபியா..!!
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் பயணத்தடை விதித்த 20 நாடுகளில், 11 நாடுகளுக்கான பயணத் தடையை நீக்கி அந்நாடுகளில் இருந்து பயணிகள் சவூதி வர அனுமதி அளிக்கப்படும் என்று சவூதியின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இருப்பினும், அந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகள் பினபற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணத் தடை நீக்கப்பட்டுள்ள நாடுகளாவன: ஐக்கிய அரபு அமீரகம், ஜெர்மனி, அமெரிக்கா, அயர்லாந்து, இத்தாலி, போர்ச்சுகல், பிரிட்டன், சுவீடன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் ஞாயிற்றுக்கிழமை முதல் சவூதிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், துருக்கி, தென் ஆப்பிரிக்கா, லெபனான், எகிப்து உள்ளிட்ட மீதமுள்ள நாடுகளுக்குண்டான பயணத் தடையானது தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிய வந்துள்ளது.