UAE: இந்திய பாஸ்போர்ட், விசா சேவைகளை வழங்கி வரும் BLS மையம் புதிய முகவரிக்கு மாற்றம்..!!
அமீரகத்தில் இந்திய பாஸ்போர்ட் மற்றும் விசா சேவைகளை வழங்கி வரும் அவுட்சோர்சிங் நிறுவனமான BLS இன்டர்நேஷனல், அபுதாபியில் ஒரு புதிய இடத்திற்கு மாறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மையம் அல் ரீம் ஐலேண்டின் (Al Reem island) ஷம்ஸ் பூட்டிக் மாலுக்கு (shams boutik mall) தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது. இந்த மையம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் என்றும், கடைசி டோக்கன் மாலை 4.30 மணிக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தூதரகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “BLS மையம் தற்பொழுது அல் ரீம் ஐலேண்டிற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்திய வெளிநாட்டு சமூக உறுப்பினர்கள் இப்போது சேவைகளைப் பெற ஷாம்ஸ் பூட்டிக் மாலுக்குச் செல்லலாம்” என்று தெரிவித்துள்ளார்.
BLS இன்டர்நேஷனல், அல் முஹைரி கட்டிடத்தில் அமைந்துள்ள அதன் மையத்தில் பிரீமியம் லவுஞ்ச் சேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.
மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனூப் ஹோம்ஸ் மற்றும் அபுதாபி தொழிலாளர் நீதிமன்றத்தின் பின்னால் உள்ள முசாஃபாவின் தொழில்துறை பகுதியில் ஒரு புதிய மையம் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது.
புதிய முகவரி:
ஷாம்ஸ் பூட்டிக் மால்,
Level 1, கடை எண் 32,
அல் ரெய்பா ஸ்ட்ரீட்,
அல் ரீம் ஐலேண்ட்