அமீரக செய்திகள்

UAE: ஸ்மார்ட் வாகன வாடகை சேவையை அறிமுகப்படுத்திய அஜ்மான்..!! பொதுமக்கள் வரவேற்பு..!!

அஜ்மானின் வணிக சேவைகள் கழகம், போக்குவரத்து ஆணையமானது ஸ்மார்ட் வாகன வாடகை சேவையை எமிரேட்டில் தொடங்கியுள்ளது.

அஜ்மான் போக்குவரத்து ஆணையத்தால் உருவாக்கப்பட்ட இந்த சேவை, அதன் கூட்டாளியான Udrive உடன் இணைந்து, குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எந்தவொரு நபரின் தலையீடும் இல்லாமல் ஸ்மார்ட் அப்ளிகேஷன் மூலம் வாகனங்களை வாடகைக்கு எடுக்க அனுமதிக்கிறது. இதற்கான வாடகையில் எரிபொருள் செலவு மற்றும் பார்க்கிங் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களுக்கான சோதனைக் கட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் இந்த சேவைக்கான அதிக தேவை இருந்துள்ளது.

அஜ்மான் போக்குவரத்து ஆணையம் – Udrive உடன் இணைந்து டாக்சிகள், லிமோசின்கள் மற்றும் ஸ்மார்ட் வாடகை சேவைகளை ஆதரிப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வாகன வாடகை தேர்வுகளை விரிவுபடுத்துவதை அஜ்மான் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அத்துடன் அஜ்மான் நகரம் முழுவதும் இந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் அங்கு பயனர், எளிய வழிமுறைகள் மூலம், வாடகைக்கு பொருத்தமான வாகனத்தைக் கண்டறிய முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அமீரகத்தில் ஸ்மார்ட் வாகன வாடகை சேவையானது பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்து சேவைகளின் தேவையை நிவர்த்தி செய்ய உதவும் என்று வர்த்தக சேவைகள் கூட்டுஸ்தாபனத்தின் நிர்வாக இயக்குனர் அஹ்மத் சக்ர் அல் மத்ரூஷி தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்மார்ட் வாடகை சேவையானது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியடையச் செய்வதிலும், அவர்களின் திருப்தியின் அளவை உயர்த்துவதிலும், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை அடைவதிலும் ஆணையத்தின் முயற்சிகளை ஆதரிக்கிறது என்றும் அல் மத்ரூஷி சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!