அமீரக செய்திகள்

UAE: பிரம்மிக்க வைக்கும் துபாயின் மக்கள்தொகை வளர்ச்சி.. அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்ட அரசு ஊடக அலுவலகம்..!

துபாயில் 1950 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் 165 மடங்கு மக்கள்தொகை அதிகரித்துள்ளதாக துபாய் மீடியா அலுவலகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆண்டு மக்கள்தொகை 3.3 மில்லியன் அதிகரித்துள்ளதாகவும், அதே நேரத்தில் 2040-ஆம் ஆண்டு 5.8 மில்லியனை எண்ணிக்கையை எட்டும் ஏன்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, 1950 மற்றும் 2020-க்கும் இடையில் மக்கள்தொகை 165 மடங்கு அதிகரித்துருக்கிறது, 1950 ஆம் ஆண்டு 20,000 ஆக இருந்த மக்கள் தொகை, 1960-இல் 40,000-ஐ எட்டியது. 1970இல் துபாயின் மக்கள்தொகை 73,000-ஐ எட்டியது, 1980 இல் எண்ணிக்கை 254,000-ஐ எட்டியது. 1990 ஆம் ஆண்டில் மக்கள்தொகை 473,000வும், 2000-இல் 907,000 ஆகவும் இருந்தது. பின்னர் 2010 ஆம் ஆண்டில் 1.8 மில்லியனை எட்டியது.

இந்த மக்கள்தொகை அதிகரிப்புக்கு துபாய் வழங்கும் வாய்ப்புகள் காரணம் என்றும் 2040-இல் எண்ணிக்கை 5.8 மில்லியனை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!